காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிட ஏன் சொன்னார்கள் ?
முன்னோர்கள் கூறிய மருத்துவ வழிமுறைகளில் சம்மனம் போட்டு உட்கார்ந்து சாப்பிடுவதும் ஒன்று. நாம் காலை மடக்கி சம்மனம் போட்டு உட்காருகையில் நமது இடுப்பு பகுதிக்கு மேலே இரத்த ஓட்டம் அதிகமாக காணப்படும்
முன்னோர்கள் கூறிய மருத்துவ வழிமுறைகளில் சம்மனம் போட்டு உட்கார்ந்து சாப்பிடுவதும் ஒன்று. நாம் காலை மடக்கி சம்மனம் போட்டு உட்காருகையில் நமது இடுப்பு பகுதிக்கு மேலே இரத்த ஓட்டம் அதிகமாக காணப்படும். இடுப்பு பகுதிக்குக் கீழே இரத்த ஓட்டம் குறைந்து காணப்படும்.
இதனால் உடலின் மிக முக்கிய உறுப்புகளாகிய சிறுனீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்பின் மேல் பகுதியில் இருப்பதால் அந்த பகுதிகளுக்கு இரத்தம் சென்று நமது உடலில் சக்தியையும் ஆரோகியத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இதன் காரணமாகத்தான் சாப்பிடும் பொழுது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும் என முன்னோர்கள் அன்றே கூறிவந்தனர்.
ஏனென்றால் இடுப்புக்கு கீழேப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகம் செல்லாமல் முழு சக்தியையும் வயிற்றுப் பகுதிக்குச் செலுத்தி நம்முடைய உறுப்புகளின் இயங்குத்திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஜீரண சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
உங்கள் கருத்து : comment