சுவாமி விவேகானந்தர் காட்டிய ஆன்மீகம்!!

சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும்

இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.

ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது.

ஒருசமயம் சுவாமி விவேகானந்தருடன் சக பயணியாக ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர் நன்கு படித்திருந்தார். உலக விஷயங்கள் தெரிந்தவராகவும், புத்திக்கூர்மை உடையவராகவும் காணப்பட்டார். ஆனாலும், அற்புதங்களை பெரிதும் நம்புபவராக இருந்தார்.

சுவாமி விவேகானந்தர் தாம் இமயமலையில் வாழ்ந்திருப்பது பற்றி கூறியதும் அவர், சுவாமி விவேகானந்தரிடம் அங்கே சித்தர் கணங்களைச் சந்தித்தீர்களா? என்று கேட்டார். அந்த மனிதர் எதுவரை போகிறார் என்பதைப் பார்க்க விரும்பிய சுவாமி விவேகானந்தர் நிகழாத பல அற்புதங்களை கூறினார். மகாத்மாக்களான சித்தர்கள் தம்மிடம் வந்ததாகவும், உலகின் முடிவைப் பற்றி தம்மிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

இந்த யுகம் எப்போது முடியப் போகிறது, எப்போது பிரளயம் நிகழும், அடுத்த யுகம் பிறக்கும்போது எந்தெந்த சித்தர்கள் யார் யாராகப் பிறந்து, எப்படி எப்படி மனித குலத்தை வழிநடத்தப் போகிறார்கள் என்றெல்லாம் சுவாமி விவேகானந்தர் கூறினார்.

அந்த சக பயணி பூரண நம்பிக்கையுடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு இவ்வளவு தூரம் தனக்கு உண்மைகளை உணர்த்திய சுவாமி விவேகானந்தரை நன்றியுடன் உணவருந்த அழைத்தார்.

அப்போதெல்லாம் சுவாமி விவேகானந்தர் கையில் பணம் வைத்துக் கொள்வதில்லை. யாரேனும் டிக்கெட் வாங்கிக் கொடுத்தால் அதை மட்டும் ஏற்றுக்கொண்டு பயணம் செய்வார். மற்றபடி உணவு, உடை, இருக்கை இவை ஆண்டவன் விட்ட வழியாகட்டும் என்று இருந்து வந்தார். அன்று அந்த மனிதர் அளித்த உணவை ஏற்றுக்கொண்டார்.

பிறகு ஒரு கணம் அவரை அமைதியாகப் பார்த்தார். அவருக்கு உண்மையை விளக்க விரும்பிய சுவாமி விவேகானந்தர் அன்புடன் அவரிடம் கூறினார்....

இவ்வளவு படிப்பும், அறிவும் உள்ள நீர், நான் கூறிய இந்தக் கற்பனை கதைகளை எல்லாம் நம்புகிறீரே நண்பரே! நீர் புத்திசாலி. உம்மை போன்றவர்கள் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டாமா?

நற்பண்பு நன்னடத்தை ஆகியவற்றில்தான் உண்மையான சக்தி இருக்கிறது. அந்த சக்தியை பெறுவதே ஆன்மீகம். மேலும் ஆசைகளை வெல்வதுதான் ஆன்மீகம் என்றார் சுவாமி விவேகானந்தர்.

சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் . மதம் என்பது மிருகத்தை மனிதனாக்கும், மனிதனை கடவுளாக்கும்.

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment