பகவான் ரமண மகரிஷியின் "நான் யார்?" நூல் பற்றி சில‌ தகவல்கள் ..

எண்ணங்கள் அலைமோதி மனம் நிம்மதி இல்லாமல் இருக்கும்போது நான் யார் என்னும் சில நிமிட விசாரம் அனைத்து எண்ணங்களையும் பஸ்பமாக்கி விடுவதை பலர் உணர்ந்திருக்கின்றனர்.

‘நானார்’ மூல நூல் வந்து ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது; பல வடமொழிச்சொற்களை உள்ளடக்கி, அந்தக் கால தமிழ் வீச்சில் எழுதப்பட்டுள்ளது அந்த நூல்.

பகவான் ரமண மகரிஷி, தமது பதினேழாவது வயதிலேயே தாம் பெற்ற ஒரு மரண அனுபவத்தில் “நான் யார்?” என்ற கேள்வியை எழுப்பி, அதிலேயே பூரண ஆத்ம ஞானம் அடையப்பெற்றவர். பிற்காலத்தில் அவர் உபதேசித்த எல்லாமே இந்த “நான் யார்" கேள்வியைச் சுற்றிச்சுற்றித்தான் பதில்களாக அமைந்தன. ஆதி காலத்தில் அவர் திருவண்ணாமலையை வந்து அடைந்து, பரம மௌன ஞானியாக இருந்த பொது, மலைமேல் விரூபாட்ச குகையில் நீண்ட காலம் தங்கியிருந்தார்.

பெரும்பாலும் வாயே திறவாமல் மௌனமாகவே இருந்த மகரிஷியிடம் எப்படிக் கேள்வி கேட்டு எப்படி பதில் வாங்குவது? பல சமயங்களில் மகானை காண வந்தவர்கள் தங்கள் கேள்விகளுக்கான பதில்களை அவரிடம் கேட்காமலேயே அவர் முன்னிலையில் விடைகளை உணர்ந்தனர்.

திருவண்ணாமலை திருத்தலத்தில் வந்து தங்கி இறையருள் பெற்ற ஞானியர் பலர். அவர்களுள் “மகான் ஸ்ரீ ரமண மகரிஷியும்” ஒருவர். மகான் ரமண மகரிஷி எளிமையான, காவி உடுத்தாத சந்நியாசியாய் இறுதிவரை வாழ்ந்தார். ரமணரின் உபதேசங்கள் மிகவும் எளிமையானதும் வலிமையாதுமாகும்.. இவர் மனிதன் தன் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், இக்கட்டான நிலைகளை எப்படி கடக்க வேண்டும் என்று தனக்கே உரித்தான கனிவான வார்த்தைகளால் போதித்தவர்.

அவரது 22/23 ஆவது வயதில், அவரை வந்து தரிசித்த சிவப்பிரகாசம் பிள்ளை என்ற ஓர் வயதில் மூத்த தீவிர ஆன்மிக சாதகர், ரமணரின் தெய்வீக ஒளியினால் கவரப்பட்டு அவரிடம் உபதேசம் பெற வேண்டும் என்று முயன்றார்.

பெரும்பாலும் வாயே திறவாமல் மௌனமாகவே இருந்த மகரிஷியிடம் எப்படிக் கேள்வி கேட்டு எப்படி பதில் வாங்குவது?

ஒரு சிலேட்டுப் பலகையைக் கொண்டு வந்து அதில் தம் கேள்விகளை ஒன்றொன்றாக எழுதி, அதிலேயே ரமண மகரிஷியின் பதில்களை எழுதச்சொல்லி வாங்கிக்கொண்டார் சிவப்பிரகாசம் பிள்ளை! ரமணர் எழுதிய பதில்களையும் குறிப்பெடுத்துக்கொண்டார். இப்படி அவர் 14 கேள்விகள்கேட்டு அவற்றிற்கான உபதேசங்களை பெற்றார். இது நடந்தது நடந்தது 1900/02 ஆண்டு வாக்கில்.

சில வருடங்கள் கழிந்தபின் 1923 இல் சிவப்பிரகாசம் பிள்ளை இந்த கேள்வி பதில்களை “நானார்?” (நான் யார்) என்ற தலைப்பில் சிறு புத்தகமாக பிரசுரித்து வெளியிட்டார். அதுதான் தமிழில் ரமண பகவானின் உபதேசங்களை உள்ளடக்கிய முதல் புத்தகமானது. அது ரமணரால் நோக்கப்பெற்று அங்கீகாரமும் பெறப்பட்ட அதிகாரபூர்வ நூலாயிற்று. அடுத்து வந்தது விசார சங்கிரகம் என்கிற நூல். அது கம்பீரம் சேஷ அய்யரால் தொகுக்கப்பட்ட ரமண உபதேசங்கள்.

இவ்விரு உரையாடல் நூல்களுமே ரமண உபதேச சாரம் எனலாம். குறிப்பாக ‘நானார்’ மட்டுமேகூடப் போதும். எத்தனையோ மறுபதிப்புகளையும் மொழிபெயர்ப்புகளையும் கண்டுவிட்டது அந்நூல்!

பிற்காலத்தில் ரமணர், தமிழ், மலையாளம், தெலுங்கு, வடமொழி எல்லாவற்றிலும் தமது உபதேசங்களையும் பல சாத்திர விளக்கங்களையும் பாக்கள் வடிவில் நூற்றுக்கணக்காக எழுதினார்.
think the inner in You

நானார் நூல் பற்றி மக்கள் கருத்து

இது ஏதோ மந்திர வித்தை போல உங்களுக்கு தெரியலாம் ஆனால் இது முழுக்க முழுக்க உங்கள் உள்ளுக்குள் இருந்து வரும் ஒரு குரல் ஒரு உணர்வு மிகத்தெளிவாக ஞான விசாரம் செய்வதன்மூலம் உங்களுக்குள் இறைவன் குடி கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

எண்ணங்கள் அலைமோதி மனம் நிம்மதி இல்லாமல் இருக்கும்போது நான் யார் என்னும் சில நிமிட விசாரம் அனைத்து எண்ணங்களையும் துவம்சம் செய்து விடும்.

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment