ரமண மகரிஷியின் 10 உபதேசங்கள்! வாழ்வில் உயர... சித்தம் தெளிவுபெற‌.. நல்லெண்ணம் வளர‌.... வளம் பல சேர்க்க...

மகான் ஸ்ரீரமணர் தன் மௌனத்தாலும் எளிய, இனிய, ஒற்றை வார்த்தையாலும் உபதேசங்களை தந்து வழிகாட்டியவர். மிக நீண்ட சொற்பொழிவுகளோ, பெரிய கஷ்டமான வழிகளைச் சொல்வதோ அவரிடம் இல்லை. அவரது உபதேசம் மிக மிக எளிமையானது.

மனித வாழ்வை உயர்வடையச் செய்யும் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியும், ஆன்மிக கருத்துகளை பரப்பியும், முக்தியடைந்த மகான்களுள், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியும் ஒருவர்.

“நல்லவர்களின் நட்பை தேடிச் செல்லுங்கள். இதனால் மனதில் உள்ள அறியாமை நீங்கி விடும்” என்று நல்ல நட்பின் வழியாக அறியாமை இருளை போக்கச் சொன்ன அற்புத மகான் ரமண மகரிஷி. ரமணர் தனது ஆற்றலை வெளிப்படையாக யாருக்கும் காட்டுவதில்லை. மௌனமே அவரது பேச்சு மற்றும் ஆசீர்வாதம் ஆகும். ‘நான் யார்’ எனும் தத்துவ விசாரமே ஸ்ரீரமணரின் கொள்கை. தத்துவம் மற்றும் அருள்மொழி ஆகும்.

சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்த சகோதரத்துவமே மனித சமுதாயத்தின் மிக உயர்ந்த குறிக்கோள் ஆகும்.

நம்மைத் திருத்திக்கொள்வதால் சமுதாயச் சீர்த்திருத்தம் தானாகவே சீர்திருத்தம் பெறும்.

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம்தான். ஆனால், வாயைமட்டும் மூடிக் கொண்டு மனம் அலை பாய்ந்துகொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

மூச்சை நெறிப்படுத்தினால், வலையில் பிடிபடும் பறவைபோல மனம் அமைதியாகும். மனதை அடக்க இது ஒரு வழி.

எந்த எண்ணமும் வீணாவதில்லை. ஒவ்வொர் எண்ணமும் எப்போதாவது ஒரு பயனை விளைவிக்கும். எண்ணத்தின் ஆற்றல் ஒரு போதும் வீண் போகாது.

மனம் அலைபாயும்போது, சக்தி எண்ணத்தினால் சிதறிப் போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போது சக்தி சேமிக்கப்படுகிறது, மனம் வலிமை பெறுகிறது.

மந்திரங்களைச் சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு எல்லாம். ஒன்றாகிப்போகும்.

நான் யார்? என்பது ஒரு மந்திரமன்று. 'நான்' என்ற எண்ணம் எங்கிருந்து உதிக்கிறது (நம்முள்) என்பதையே அது குறிக்கிறது. மற்ற எண்ணங்களுக்கெல்லாம் மூலம் அந்த எண்ணமே.

நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு. அவரிடத்து சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நல்ல குணங்கள் அமைந்திருக்க வேண்டும்.

குரு கட்டாயமாகத் தேவை. புத்தியாலும், பொறி புலன்களாலும் ஆன கட்டிலிருந்து மனிதனை விடுவிக்க குருவால் மட்டுமே முடியும்.

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment