வாராஹி அனுகிரக அஷ்டகம்
Varahi Anugraha Ashtakam Tamil Lyrics
குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள்
1. மாதர் ஜகத்ரசன நாடக ஸூத்ர தார:
ஸத்ரூபமாகலயிதும் பர மார்ததோஸ்யம்
ஈஸோப் யதீஸ்வர பதம் ஸமுபைதி தாத்ருக்
கோஸ்ந்ய: ஸ்தவம் கிமிவதாவக மாததாது
2. நாமானி கிம்த க்ருணதஸ்தவ லோக துண்டே
நாடம் பரம் ஸ்ப்ருஸதி தண்ட தர ஸ்யதண்ட
யல்லே ஸலம்பித பவாம்பு நிதிர் யதோயத்
த்வந்நாம ஸம்ஸ் ருதிரியம் நனு ந: ஸ்துதிஸ்தே
3. த்வச்சிந்தநாதர ஸமூல்ல ஸத ப்ர மேயா
நந்தோதயாத் ஸமுதி தஸ்புட ரோம ஹர்ஷ:
மாதர் நமாமி ஸுதிநாதி ஸ தேத்யமும் த்வா
மப்யர் தயேர் தமிதி பூரய தாத் தயாளோ
4. இந்த்ரேந்து மௌளி விதி கேஸவ மௌளி ரத்ந
ரோசிஸசயோஜ்ஜ்வலித பாத ஸரோஜ யுக்மே
சேதோ நதௌ மம ஸதா ப்ரதி பிம் பிதா த்வம்
பூயோ பவானி வித தாத ஸதோருஹாரே
5. பூயோ பவானி வித கஷிதிதல்ஸ்ய வராஹ மூர்தே
வாராஹி மூர்தி ரகிலார் தகரீ தவமேவ
ப்ரா லேய ரஸ்மி ஸுகலோ ல்லஸிதா வதம்ஸா
த்வம் தேவிவாமதநுபாக ஹரா ஹரஸ்ய
6. த்வாமம் பத்ப்த க நகோஜ்ஜ்வ லகாந்தி மந்தர்
யே சிந்தயந்தி யுவதீ தனுமா களாந்தாம்
சக்ராயுதத்ரி நயனாம்ப ரபோத்ருவக்த்ராம்
தேஷாம் பதாம்புஜ யுகம் ப்ரண மந்திதேவா:
7. த்வத் ஸேவநஸ்கலித பாப சயஸ்ய மாத:
மோக்ஷஸ பி யத்ர ந ஸதாம் கணநா முபைதி
தேவாஸுரோரகந்ருபாலன மஸ்ய பாத
தத்ர ஸிய: படுகிர: கிய தேவ மஸ்து
8. கிம் துஷ்கரம் த்வயி மனோ விஷயம் கதாயாம்
கிம் துர்லபம் த்வயி விதான வதர்சிதாயாம்
கிம் துஷ்கரம் த்வயிஸக்ருத் ஸ்ம்ருதி மாகதாயாம்
கிம் துர் ஜயம் த்வயி க்ருத ஸ்துதி வாதபும்ஸாம்…
சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமானவள் வராஹி அம்மன், பஞ்சமி திதியில் வராஹி தேவியை விரதம் இருந்து வழிபடுங்கள். வாழ்வில் வரம் பல தந்து, நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை. சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால் அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராஹி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
ஓம் ஸ்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
எனும் மந்திரத்தை துன்பம் வரும் போது மட்டுமல்ல எப்போதும் ஜபித்துக் கொண்டிருந்தால் தேவியின் திருவருள் சடுதியில் கிட்டும்.
ஸ்ரீ வாராஹி பன்னிரு நாமாக்கள்
பஞ்சமீ, தண்டநாதா, ஸங்கேதா, ஸமேஸ்வரீ, ஸமய ஸங்கேதா, வாராஹீ, போத்ரிணீ, ஸிவா, வார்த்தாளீ, மஹா ஸேநா, ஆஜ்ஞாசக்ரேஸ்வரீ, அரிக்நீ.
பஞ்சமி தினங்களில் தூப-தீப ஆராதனையுடன் மனமுருகி ஸ்ரீ வாராஹிதேவியை வழிபட, நமக்குத் துணை நிற்பாள். ஸ்ரீ வாராஹியை வழிபட்டு அருள் பெறலாம்.
Varahi Anugraha Ashtakam Significance | வாராஹி அனுகிரக அஷ்டகம் மகிமை
பஞ்சமி திதியில் வராஹி அம்மனுக்கு விரதம் இருந்தால் எதிர்ப்புகள் அகலும், பகை ஒழியும். பஞ்சமி திதி நாட்கள் ஸ்ரீ வாராஹிதேவிக்கு (Varahi Devi) மிக உகந்தவை. பஞ்சமி திதியில் வராஹிதேவியை வழிபடுங்கள். நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை!
வாராஹி அனுக்ரஹ அஷ்டகம் என்பது வாராஹி தேவியின் அருளைப் பெறுவதற்காக எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட பிரார்த்தனையாகும். வாராஹி தேவி சப்த மாத்ருக்களில் (தாய் தெய்வங்கள்) ஒருவர். அவள் விஷ்ணுவின் பன்றி அவதாரமான வராஹ பகவானின் மனைவி. வராஹி தேவி ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரி தேவியின் அனைத்துப் படைகளின் தளபதியாக இருப்பதால் தண்டநாயகம்பா என்றும் அழைக்கப்படுகிறார். ஸ்ரீ வாராஹி அனுக்ரஹ அஷ்டகத்தை இப்பக்கத்தில் பெற்று பக்தியுடன் ஜபித்து வாராஹி தேவியின் அருளைப் பெறுங்கள்.
உங்கள் கருத்து : comment