ஸ்ரீ மந்த்ர புஷ்பம் வேதாரம்பம் | Sri Mantra Pushpam Vedarambam
Sri Mantra Pushpam Vedarambam in Tamil | ஸ்ரீ மந்த்ர புஷ்பம் வேதாரம்பம் | Sri Mantra Pushpam Vedarambam in Tamil. ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் – ப்ரமாணத் திரட்டு | ஸ்ரீ மந்த்ர புஷ்பம் வேதாரம்பம் –ஸ்ரீ மந்தர புஷ்பம்
ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் – ப்ரமாணத் திரட்டு | ஸ்ரீ மந்த்ர புஷ்பம் வேதாரம்பம் –ஸ்ரீ மந்தர புஷ்பம்
ஸ்ரீ மந்த்ர புஷ்பம் வேதாரம்பம் | Sri Mantra Pushpam Vedarambam in Tamil
ஹரி: ஓம். அக்நிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம் ருத்விஜம் |
ஹோதாரம் ரத்நதாதமம் || ஹரி: ஓம். (ரிக் வேதம்)
ஹரி: ஓம். இஷே த்வோர்ஜே த்வா வாயவஸ் ஸ்தோபாயவஸ் ஸ்த தேவோ வஸ்ஸவிதா
ப்ரார்ப்பயது ச்ரேஷ்டதமாய கர்மணோ || ஹரி: ஓம். (யஜுர் வேதம்)
ஹரி: ஓம். அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே |
நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி || ஹரி: ஓம். (ஸாம வேதம்)
ஹரி: ஓம். சம் நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே
சம் யோ ரபிஸ்ரவந்து ந: || ஹரி: ஓம் ஹரி: ஓம். (அதர்வண வேதம்)
ஓமித்யக்ரே வ்யாஹரேத் |
நம இதி பஸ்சாத் |
நாராயணாயேதி உபரிஷ்டாத் |
ஓமித்யேகாக்ஷரம் |
நம இதி த்வே அக்ஷரே |
நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி |
ஏதத் வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதம் |
யோ ஹ வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதமித்யேதி |
அநபப்ருவ: ஸர்வமாயுரேதி |
விந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம் |
ததோ அம்ருதத்வம் அச்நுதே ததோ அம்ருதத்வம் அச்நுத இதி |
ய யேவம் வேத |
இத்யுபநிஷத் | (உபநிஷத்)
அத கர்மாந்யாகாராத்யாநி க்ருஹ்யந்தே| உதகயந பூர்வ
பக்ஷரஹ: புண்யாஹேஷு கார்யாணி| யஞ்ஞோபவீதிநா ப்ரதக்ஷிணம் |
இச்சாமோ ஹி மஹாபாஹும் ரகுவீரம் மஹாபலம் |
கஜேந மஹதா யாநதம் ராமம் சத்ராவ்ருதாநநம் || (ஸ்ரீ ராமாயணம்)
தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் |
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே || (ஸ்ரீ ராமாயணம்)
தாஸாமாவிரபூச்சௌரி: ஸ்மயமான முகாம்புஜ: |
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாந் மந்மத மந்மத: || (ஸ்ரீ பாகவதம்)
ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: |
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் || (ஸ்ரீ விஷ்ணு புராணம்)
வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி |
ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ || (லிங்க புராணம்)
ஸ்ரீ மந்தர புஷ்பம் | Sri Mantra Pushpam
ஓம் யோபாம் புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ சந்த்ரமா வா
அபாம் புஷ்பம்/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ ய ஏவம் வேத (1)
யாரொருவன் நீரின் மலரை அறிகிறானோ,
அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகிறான்.
நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ
அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான்.
எவனொருவன் நீரின் ஆதாரத்தை புரிந்து கொள்கிறானோ
அவன் பசு மற்றும் மிருகங்கள், புத்திர செல்வங்கள், மலர்கள் எல்லாவற்றையும் பெறுவான்.
“ஓம் யோபாம் புஷ்பம் வேத/புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி”
“எவனொருவன் நீரின் மலரை அறிகிறானோ அவன் சர்வ ஐசுவரியங்களையும் பெற்றவனாகிறான்.”
இதில் இரண்டு வார்த்தைகள் முக்கியமானவை.
நீர் மற்றும் மலர்.
‘ஆபா’என்றால் நீர்.நீரின் குணம் இடைவிடாமல் ஒழுகிக்கொண்டிருப்பது; ஓடிக்கொண்டிருப்பது; எழும்பி எழும்பி அடங்குவது.
மழை இடை விடாமல் பெயர்தது என்கிறோம் நீர்வீழ்ச்சி நின்று நின்று வருவதில்லை. நதி ஓடிக்கொண்டேயிருக்கிறது.
கடலலைகள் ஒன்றன்பின் ஒன்றாக எழும்பி அடங்குகிறது.
நமது வாழ்வும் அதே போல்த் தான்.நமது அனுபவங்கள் புலன்கள் கொண்டு வரும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டது
என்று முன்னால் கண்டோம். புலன்கள் ஒரு நொடி கூட ஓய்ந்திருப்பதில்லை.
உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் அவை தகவல்களை சேகரித்துக் கொண்டேயிருக்கிறது;
மூளை அவைகளை அலசி ஆராய்ந்து உருவம் கொடுக்கிறது.
இந்த இடைவெளியில்லாத நீரொழுக்கு தான் , நீரோட்டம் தான் நமது வாழ்க்கை.
பிறப்பிலிருந்து இறப்பு வரையும் பிறகு மறு பிறப்பும் அதன் பின் மறுபடியும் இறக்கும் வரையும் இந்த நீரோட்டம் நிலைப்பதில்லை.
எண்ண அலைகள் நம் உலகிற்கு உருக்கொடுக்கிறது. அதைத்தவிர வேறு உலகம் கிடையாது.
உலகமே நம் மனத்தில் தான் நிலைகொள்கின்றது. அதற்கென்று தனி இருப்பு கிடையாது.இது தான் உண்மை.
இந்த உண்மையை அறிதல்தான் இந்த நீரோட்டத்தில், நீர் வீழ்ச்சியில், சம்சாரக்கடலில் மலரும் மலர்.இது தான் ஞானம்.
எவனொருவன் இந்த உண்மையை அறிகிறானோ அவன் சர்வ ஐசுவரியங்களையும் பெற்றவனாகிறான்.
இது தான் முதல் பாகத்தில் பொருள்.நமது முன்னோர்கள் ஞானிகள் இதைத் தான் பூடகமாக சொல்லியுள்ளார்கள்.
புத்திர பாக்கியம், செடி- கொடிகள், மலர்கள், பசு மற்றும் கால்நடை செல்வங்கள் மனிதன் இச்சிக்கும் ஐசுவரியங்கிளுக்கு உதாரணங்கள்.
மேலே சொன்ன உண்மையை அறிந்தவன் எல்லா செல்வங்களும் பெற்றவன் பெறும் ஆனந்தத்தை விட மேலான ஆனந்தகிடைத்தவனாகிறான்.
சந்த்ரமா வா அபாம் புஷ்பம்/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி
நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான்.
நிலவின் இயற்கை தன்மை ஒளி தருவது.எது மனிதனுக்கு ஒளி தருகிறது? மனம் தான்.
மனம் புலன்கள் பெற்றுத்தரும் தகவல்களை் மூளைக்குள் ஆராய்ந்து பதிவு செய்யவில்லை என்றால் நமக்கு எந்த அறிவும் இராது.
நாம் வெறும் ஜடமாகத்தான் இருப்போம்.
ஆகவே நமக்கு ஒளி தரும் நிலவு தான் மனம்.
இன்னொரு ஒற்றுமை என்னவென்றால் நிலவு இன்று இருந்தது போல் நாளை இராது.
ஒன்று வளர்ந்து கொண்டேயிருக்கும் அல்லது தேய்ந்து கொண்டேயிருக்கும். மனமும் எப்பொழுதும் ஒரே போல் இருப்பதில்லை.
மனம் ஒரு நிமிடம் ஆனந்தத்தில் ஆறாடும்; மறுநமிடமே துயரங்கள் எனும் மேகக் கூட்டத்தில் மறைந்து துன்பப்படும் .
இதற்கெல்லாம் காரணம் அது கடந்து போகும் அனுபவங்கள். அது தான் உலக வாழ்க்கை.அந்த அனுபவங்களில் பூத்த மலர் தான் மனம்.
மனம் என்பதற்கு பௌதிக உருவம் கிடையாது. அது மூளையிலேயோ வேறு எங்கோ இருக்கிறது என்று குறிப்பிட்டு கூற முடியாது.
அது புலன்கள் கொண்டுவரும் தகவல்களை சேகரித்து வைக்கும் ஒரு கிடங்கு அவ்வளவு தான்.
உலகம் என்பது எண்ணற்ற மனிதர்களின் மனங்கள் சேகரித்து வெவ்வேறு விதமாக புரிந்து கொண்டு பதிவு செய்துள்ள தகவல்கள் தான்.
ஒவ்வொருவரின் உலகமும் வேறு வேறு விதமாக இருக்கிறது.ஆகவே மனம் என்பது ஒரு சத்தியமல்லாத ஒன்று.
அதன் கட்டளைகளை நிராகரித்து விட்டு ஆத்மா சொல்வது படி நடந்து கொண்டால் விஷய வாசனைகள் அறவே அழிந்து தூய்மையடைந்தவனாவான்.
அவன் பசு, புத்திரர்கள், மலர்கள் போன்ற எல்லா செல்வங்களையும் பெறுவான்.
இந்த உண்மையை புரிந்து கொண்டவன் சர்வ ஐசுவரியங்களையும் பெறுகிறான்.
மந்திரம் இரண்டு
யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அக்னிர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நதி மணல்மீது ஓடும்போது ஒழுகும் பொழுது ஒரு நிறத்திலிருக்கும்; களிமண்ணிலும் சேற்றிலும் ஓடும் பொழுது வேறொரு நிறத்திலிருக்கும்;
பாறை மீது ஓடி வரும் பொழுது வேறொரு நிறத்திலிருக்கும. சில நேரங்களில் தெளிந்த நீரோடை; மற்று சில நேரங்களில் கலக்கலான நீரோட்டம்.
இவைக்கெல்லாம் ஆதாரம் அது எதன் மீது ஒழுகுகின்றதோ அந்த மண். அது போல் நமது அனுபவங்களுக்கும் ஒரு ஆதாரம் வேண்டுமல்லவா? அது எது?
பிரம்மம் அல்லது பரப்பிரம்மம் அல்லது பரமாத்மா அல்லது அனந்தாவபோதம் தான் நம் வாழ்க்கை எனும் நீரோட்டத்திற்கு ஆதாரம்.
வாசனைகளற்ற, மாசற்ற, தூய பிரம்மம் நமது வாழ்வின் ஆதாரம்.
இந்த பிரம்மம் அல்லது அவபோதம் இல்லையென்றால் நாம் எதையும் அனுபவிக்க முடியாது.
நமது புலன்களும், மனமும், புத்தியும் வேலை செய்யாது
இந்த உண்மையை அறிந்தவன் ஆத்ம சாக்ஷாத்காரமடைந்தவனாகிறான்.
அவனிலிருந்த எல்லா விருப்பு- வெறுப்புக்களுக்கும வாசனைகளும் ஒழிந்து போய்விடுகின்றன.
அவன் பிரம்மமே ஆகிவிடுகிறான். அவன் எதாலும் பாதிக்கப்படமாட்டான். அவனுக்கு இன்ப- துன்பங்கள் கிடையாது.
பிரம்மம் நெருப்பு. அது எல்லா மாசுக்களையும், வாசனைகளையும் எரித்து சாம்பலாக்கி விடுகிறது.
இந்த பிரம்மமெனும் நெருப்பு தான் வாழ்க்கை அல்லது உலகமெனும் நீரோட்டத்திற்கு ஆதாரம்.
இந்த உண்மையை அறிந்தவன் பரம சாந்தியை அடைகிறான்..
மந்திரம் இரண்டு (தொடர்கிறது)
அக்னிர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோக்னேராயதனம் வேத/ ஆயதனவான்
பவதி/ ஆபோ வா அக்னேராயதனம்/ ஆயதனவான் பவதி/ய ஏவம் வேத (2)
அக்னி என்றால் எது ஒன்று இடைவிடாமல் மேல்நோக்கி போய்க்கொண்டிருக்கிறதோ அது அக்னி.
’ அக்னி’ உண்டாவது உண்மையான பரமாத்மாவைத் மறைத்து – மறந்து , புலன்கள் கொண்டு வரும் தகவல்களை் மெருகேற்றி
பரமாத்மாவின் மீது பதித்து பொய்யான ஒரு ‘நானை’ உருவாக்குகிறது.
அந்த அக்னி – ஜீவாத்மா இந்த ‘மாய நான்’ தான் ‘உண்மையான நான்’ என்று நம்ப ஆரம்பிக்கிறது.
உண்மையான ‘ நான்’ விருப்பு வெறுப்பில்லாத, ஆதியும் அந்தமும்்இல்லாத சர்வ வியாபி!
ஆனால் புலன்கள் தரும் தகவல்களை நம்பி,தன் விஷய வாசனைகளால் மாசுற்று, அஞ்ஞானத்தில் உழலுகின்றது ஜீவாத்மா!
இந்த மாய நான் ஒரு விதத்தில் பார்த்தால் அக்னியே!
இந்த அக்னி தான் வாழ்க்கை எனும் நீரோட்டத்திற்கு /லௌகீக பார்வைக்கு ஆதாரமாக இருக்கிறது.
இந்த அவித்யை நீங்கிவிட்டால் மாசற்ற தூய பரப்பிரம்மத்தை உணர முடியும்.
ஆகவே அக்னிக்கு ஆதாரம் புலன்கள் தரும் தகவல்களால் உருவான, காணப்படும் உலகம்.
அந்த நீரிற்கு ஆதாரம் இந்த அக்னி. அக்னி- தானும் எரிந்து, அனுபவங்களையும் எரித்து துன்பத்திற்காளாகிறது.
இந்த உண்மையை உணர்ந்தவன் எல்லா செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாவான்
இந்த அக்னிக்கும் ஆதாரம் புலன்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் உளவான அனுபவங்கள்.
ஆக, அக்னிக்கும் ஆதாரம் நீரே! இப்படி ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து மாய நானை உயிருடன் வைத்துக் கொள்கிறது.
அனுபவங்கள் அழிந்தால் பொய்யான இந்த நான் அழிந்து விடும்.இந்த பொய்யான நான் அழிந்து மெய்யான நான் உணரப்பட்டுவிட்டால் அனுபவங்கள் இராது.
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில்( பிரம்மத்தில், அனந்தாவபோதத்தில்) நிலை பெற்றவன் ஆகிறான்.
நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் ( பிரம்மத்தில்)நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
சுருக்கமாக சொல்லப் போனால் அப்படிப் பட்டவன் சத்திய சாஷாத்காரம் அடைந்தவனாகிறான்.
மந்திரம் 3
யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ வாயுர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/
யோ வாயோராயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை வாயோராயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (3)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். காற்றே நீரின் ஆதாரம்.
யார் காற்றின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே காற்றின் ஆதாரம்.
யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (3)
நீரின் ஆதாரத்தை அறிந்தவன் பிரம்மத்தில் நிலைத்து நிற்கிறான்.நீரின்ஆதாரம் காற்றே! காற்று அல்லது வாயு இல்லையென்றால் பிராணன் இல்லை.
பிராணன் இல்லையென்றால் புலன்கள் செயல்பட மாட்டா! புலன்கள் செயல்படவில்லையென்றால் மனதிற்கும் புத்திக்கும் தகவல்கள் கிடைக்காது.
அனுபவங்களும் இல்லையென்றாகிவிடும். ஆகவே லௌகீக வாழ்விற்கு, அனுபவங்கள் எனும் நீர் வீழ்ச்சிக்கு ஆதாரம் காற்றே.
இந்த உண்மையை அறிந்தவன் பிரம்மம் எனும் சத்தியத்தை அறிந்து அதில் நிலை கொள்ள முடியும்.
ஆத்மா அல்லது பரமாத்மா அல்லது அனந்தாவபோதம் விருப்பு வெறுப்பில்லாதது. வாசனைகள் இல்லாதது.
அப்படிப்பட்ட ஆத்மா வெளியுலக வஸ்துக்களுடன் தொடர்பு ஏற்பட்டு புலன்கள் மூலம் தகவல்களை சேகரித்து
அனுபவங்களாக மாற்ற பிராணனின் உதவி தேவை.ஆக பிராணன் அல்லது வாயு தான் அனுபவங்களின் ஆதாரம்.
காற்றிற்கு என்ன ஆதாரம்?
அனுபவங்களே பிராணனின் ஆதாரம். அனுபவங்கள் இல்லையென்றால், புலன்கள் செயல் படவில்லையென்றால்
பிராணன் இருந்தும் பயனில்லை. ‘ கோமா’ நிலையிலிருப்பார்கள் பிராணனுடன் தான் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு, புலன்கள் வேலை செய்யாத்தால் தங்களைச் சுற்றியுள்ள உலகம் என்ன என்ற அனுபவம் கிடையாது.
அனுபவங்கள் இருந்தால்த்தான் பிராணனுக்கும் பயனுண்டு. ஆகவே பிராணனுக்கு ஆதாரம் அனுபவங்கள் எனும் நீரோட்டமே! .
இந்த உண்மைகளை எவனொருவன் அறிகிறானோ அவன் பிரம்மனை அறிகிறான்.பிரம்மத்தில் நிலைத்து நிற்கிறான்.
ஆத்ம சாஷாத்காரம் அடைகிறான்.
மந்த்ரம் 4
யோபா மாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அஸெள வை தபன்னபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/
யோமுஷ்ய தபத ஆயதனம் வேதஆயதனவான் பவதி/ ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்/
ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (4)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். கொதிக்கும் சூரியனே நீரின் ஆதாரம்.
யார் கொதிக்கும் சூரியனின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே அந்த தகிக்கும் சூரியனின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (4)
எவனொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் பிரம்மத்தை அறிந்து அதில் நிலைகொள்கிறான்.
அதாவது பிரம்ம சாக்ஷாத்காரம் அடைந்தவனாகிறான்.தன்னையே அறிந்தவனாகிறான். ஆத்ம சாஷாத்காரம் அடைந்தவனாகிறான்.
நீர் என்பது புலன்கள் சேகரித்துத் தரும் தகவல்களின் அடிப்படையில் மனம் உருவகப்படுத்தும் உலகானுபவங்கள்தான்
என்று முன்னே கண்டோம்.அந்த உலக அனுபவங்கள் உருவாக வேண்டும் என்றால் பரமனின் அருள் இல்லாமல் முடியாது.
அந்த பரமனோ, தகிக்கிம் சூரியனாக விளங்குகிறான்.அந்த சூரியன்- பிரம்மன் தான் நீரின் ஆதாரம் எனப் புரிந்து கொண்டவன்
அந்த பிரம்மத்தில் நிலைத்து நிற்கிறான்.
பிரம்மன் உலக அனுபவங்களுக்கெல்லாம் சாட்சி மாத்திரமாக நிலைகொள்கிறான்.
சூரியனின் தாபமோ, நீரின் குளிர்மையோ பரமாத்மாவைத் பாதிப்பதில்லை. ஆனால் அவனில்லையென்றால் உயிரோட்டம் கிடையாது.
உலக அனுபவங்களும் கிடையாது.ஆகவே உங்களுடைய அனுபவங்களெனும் நீரிற்கும் இந்த பிரமன் தான் ஆதாரம்.
இதை அறிந்தவன் நம் பிரமனில் நிலை கொள்கிறான்.
ஆக உலகமாகின்ற அனுபவங்கள். எனும் நீரிற்கு சூரியன் ஆதாரம். அந்த சூரியனுக்கு அந்த நீரே ஆதாரம்.
அனுபவங்கள் இல்லையென்றால் சூரியனை எப்படி அறிவது?
மந்த்ரம் 5
யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ சந்த்ரமா வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/
யச் சந்த்ரமஸ ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம்/
ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (5)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் ( ஆத்மாவில்) நிலை பெற்றவன் ஆகிறான்.
நிலவே நீரின் ஆதாரம். யார் நிலவின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே நிலவின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (5) )
எவனொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் சர்வ ஐசுவரியங்களையும் பெற்றவனாகிறான்.
அவன் பிரம்மத்தை அறிந்தவனாகிறான்.நீர் என்றால் அனுபவங்கள் என்று முன்னால் கண்டோம்.
இந்த அனுபவங்களோ மனதின் செயல்பாட்டினால் உளவாகிறது.இந்த மனம் நிலவை ஒத்ததாகவே உள்ளது என்றும் கண்டோம்.
நிலவில் அமுது கலசம் உள்ளது. அது போல் மனம் தான் எல்லா அனுபவங்களையும் அனுபவிக்கின்றது.
நிலவு ஒளிக்கும் இருளிற்கும் இடையில் ஊஞ்சலாடுகிறது.
மனமும் இன்ப- துன்பங்களிடையே ஊஞ்சலாடுகிறது.
மனம் அல்லது நிலவு சூரியனைப் போல் ஸ்திரத் தன்மையோடு இருப்பதில்லை.
மனமும் பிரம்மனைப் போல் உறுதியாக எதாலும் பாதிக்கப் படாமல் நிலை கொள்வதில்லை.
நிலவிற்கு தனதான ஒளி கிடையாது. சூரியனின் ஒளியின் பிரதிபலிப்பு தான் அதன் ஒளி! .
அது போல் மனதிற்கும் தனியாக இருப்பு கிடையாது.அது வெறும் ஜடமே!
மனம் பலதரப்பட்ட உணர்ச்சிகளை உணருகிறது, சாஷி மாத்திரமாயுள்ள பிரம்மனின் சைதன்யத்தால்த் தான்.
மனம் உலகப் பொருட்களை அனுபவிப்பது பரமாத்மாவின் சைதன்யத்தால்த்தான் என்றிருந்தாலும்,
அது மனம் பரமாத்மாவிலிருந்து தனியானது என்று கற்பனை செய்து பௌதிக இன்பங்களைத் தேடி ஓடுகிறது.
மனம் அனுபவிக்கின்ற எல்லா சுகங்களும் அந்த பரமாத்மாவிற்கே உரித்தானது.
ஏனென்றால் அந்த பரமாத்மாவின் ஆதாரத்தில் தான் மனம் நிலை கொள்கின்றது. ஆனால் மனம் அவித்யையினால் மயக்கமுற்று
அதே இன்பானுஅவங்களை வெளியுலக ஜடப்பொருட்களில் தேடுகிறது.
இப்படிப்பட்ட மனம் தான் எல்லா அனுபங்களுக்கும் ஆதாரம். ஆகவே நிலவு தான் நீரிற்கு ஆதாரம்.
ஆனால் எல்லா அனுபவங்களும் மனதில் மையங்கொண்டுள்ளது.மனம் உருவாவதே அனுபவங்களை சேகரிப்பதற்குத்தான்.
ஆகவே அனுபவங்களே மனதிற்கு ஆதாரம்.அனுபவங்கள் இல்லையென்றால் மனம் இல்லை.
நிலவும் நீரும் ஒன்றிற்கொன்று ஆதரவாக நிலை கொள்கின்றது. இந்த உண்மையை அறிந்தவன் பிரம்மத்தை அறிந்தவன்.
அவன் அந்த பரம சத்தியத்தை அறிந்தவனாகிறான்.அவன் செல்வத்தின் ஐசுவரியங்களையும் அடைகிறான்
மந்த்ரம் 6
யோபாமாயதனம் வேத/ ஆயதனாவான் பவதி॥ / நக்ஷத்ராணி வா அபாமாயதனம்/
ஆயதனவான் பவதி/ யோ நக்ஷத்ராணாமாயதனம் வேத/
ஆயதனவான் பவதி/ ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (6)
யார் நட்சத்திரங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நட்சத்திரங்களின் ஆதாரம்.
யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (6)
நக்ஷத்திரம். என்றால் என்ன? எது ஒன்று மாற்றத்திற்கு ஆட்படாமல் அழிவில்லாமல் இருக்கிறதோ அது நக்ஷத்திரம்.
நக்ஷத்திரங்கள் இடம் மாறுவதில்லை–ஒரே இடத்தில் நிலைகொள்கின்றான!
அவை பிரம்மனால் – சிருஷ்டிகர்த்தாவால் நிர்ணயிக்கப் பட்ட நியதிகள்.பிரம்மன் தான் எல்லா உயிரினங்களின் ஒட்டுமொத்தமான மனம்.
அவன் ஹிரண்யகர்பத்தின் ஈசன்.அவன் தன் சிருஷ்டிகளின் எல்லா அனுபவங்களையும் அனுபவிப்பவன்.
ஆனால் எப்பொழுதும் சாஷி மாத்திரமாக நிலைகொள்கிறான்.எந்த அனுபவங்களாலும் பாதிக்கப்படுவதில்லை.
தனது சிருஷ்டி விருப்பத்தை தனது எண்ணப்படி பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பதின் மூலம் திருப்திப் படுத்திக் கொள்கிறான்.
தனது சிருஷ்டிகளுக்கான சட்டதிட்டங்களை அவனே வகுத்துக் கொள்கிறான்.அப்படிப் பட்ட பிரம்மனின் எண்ணங்களே
எல்லா சிருஷ்டிகளின் அனுபவங்களுக்கும் ஆதாரம்.ஆகவே அனுபவங்களாகப்பட்ட நீரிற்கு பிரம்மனால் வகுக்கப்பட்ட சட்டதிட்டங்களான நட்சத்திரங்களே ஆதாரம்.
சிருஷ்டிகளோ பிரம்மனின் சிருஷ்டி வாசனைகளை பூர்த்தி செய்வதற்காக தோன்றியவையாகும்.
ஆகவே சிருஷ்டிகளின் அனுபவங்கள் தான் பிரம்மன் வகுத்துக் சட்டதிட்டங்களுக்கு ஆதாரம். நக்ஷத்திரங்களுக்கு ஆதாரம் அனுபவங்களே!
இந்த உண்மையை உணர்ந்தவன் பிரம்மனின்- தன்னில்- ஆத்மாவில் நிலைகொள்கிறான். அவன் ஆத்ம சாக்ஷத்காரம் அடைந்தவனாகிறான்.
மந்த்ரம் 7
யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ பர்ஜன்யோ வாஅபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத
ஆயதனவான் பவதி/ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (7)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மேகமே நீரின் ஆதாரம்.
யார் மேகங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மேகங்களின் ஆதாரம்.
யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
விளக்கவுரை
நீரின்- அனுபவங்களின் ஆதாரத்தை எவனொருவன் அறிகிறானோ, அவன் பிரம்மத்தை அறிந்தவனாகிறான். பிரம்மத்துடன் ஐக்கியமாகிறான்.
அனுபவங்களின்- நீரின் ஆதாரம் யாது? மேலோட்டமாக பார்க்கின்ற பொழுது மழை பொழிகின்ற மேகம் தான் நீரின் ஆதாரம் என்று
நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்று தோன்றும்.
தேகத்திலிருந்து நீர் வருகிறது என்று சொல்வதற்கு ரிஷி வரவேண்டியதில்லை.சாமானியர்களுக்கே புரியும்.
பிறகு அவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள்?
பர்ஜன்யா என்றால் நீர் நிறைந்த மேகம்.இடி முழக்கமிடும் மேகம்.எப்பொழுது வேண்டுமானாலும்
நீர் திவளைகளை கொட்டித் தீர்த்துவிட தயாராக இருக்கின்ற மேகம்.
‘வெளிவராத வாசனைகள் ‘ எப்பொழுது வேண்டுமானாலும் ஜீவாத்மாவை பயன்படுத்தி அனுபவங்களை
சிருஷ்டிக்கப் தயாராய் இருக்கின்ற மேகம் தான் நீரின் ஆதாரம்.அதற்கு கால- இடம் கட்டுப்பாடு உண்டு.
பரம சாந்தியுடைய பிரமனிலிருந்து ஜீவன் மாறுபடுவது எப்பொழுதும் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்ற வாசனைகள் நிறைந்த
இடி மேகங்களால்த் தான்.ஜீவாத்மா எப்பொழுதும் ஒலிகளாலும் உருவங்களாலும் கட்டப்ட்டிருக்கின்றது.
நாம- ரூப வேற்றுமைகளால் கவரப்பட்டு அல்லல் படுகிறது..
இந்த வாசனைகள் நிறைந்த மேகங்கள் தான் ஜீவாத்மாவின் அனுபவங்கள் எனும் நீரிற்கு ஆதாம்.
ஜீவாத்மாவின் வாசனைகள் அனுபவங்களாக மாறுகிறது. புலன்களின் வாசனைகளுக்கு அறுதி கிடையாது.
ஒன்று நிறைவேறும் பொழுது இன்னொன்று முளைத்தெழுகிறது. ஒவ்வொரு அனுபவமும் தனித் தனிதான் என்றிருந்தாலும்
ஒன்றிலிருந்து முளைத்தது தான் மற்றொன்று.
மழைத் துளிகள் தனித் தனி தான் என்றாலும் ஒரே நீர்வீழ்ச்சி போல் தோன்றுகிறதல்லவா!
ஒரு நீர்த்துளி தான் இன்னொரு நீர்த்துளிக்கு ஆதாரம். ஆகவே மேகங்கள் உருவாவதற்கு நீர்த்துளிகளே காரணம்.
பூமியில் விழுகின்ற நீர் ஆவியாகி மேலே போய் மேகங்கள் உருவாகின்றன. மீண்டும் மழைத்துளிகளாக பூமியை வந்தடைகின்றன.
அவ்வாறு மேகங்களுக்கும் ஆதாரம் நீரே தான். இந்த உண்மையை – இந்த சாக்கிரியத்தை எவனொருவன் அறிகிறானோ அவன்
பிரம்ம சத்தியத்தை அறிந்தவனாகிறான்.அவன் மேற்கொண்டு வாசனைகளுக்கு இடம் தரான்.
அவன் சர்வ ஐசுவரியங்களுக்கும் அதிபதியாகிறான். அவன் பிரம்மமேமாகிவிடுகிறான்
மந்த்ரம் 8
யோபாமாயதனம் வேத/ ஆயதனாவான் பவதி/ ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யஸ் ஸம்வத்ஸரஸ்யாயதனம்
வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (8)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.காலமே நீரின் ஆதாரம்.
யார் காலத்தின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே காலத்தின் ஆதாரம்.
யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (8)
‘ஸம்வத்ஸரம்’ தான் நீரின் ஆதாரம். நீர் என்றால் உலக அனுபவங்கள். இந்த அனுபவங்கள் பொறிகள்( இந்திரியங்கள்)
சேகரித்து வழங்கும் வெளியுலக தகவல்களை ஆதாரமாக்கி மனம் நெய்தெடுத்த கற்பனைகள்.இவைகளுக்கு ‘ ஸம்வத்ஸரம்’ தான் ஆதாரம்.
‘ ஸம்வத்ஸரம்’ என்றால் -பருவங்கள் இணைந்து உருவானது ஸம்வத்ஸரம். இது வருடம் என்றும் கூறப்படுகிறது.
மழைக்காலம், குளிர்காலம் , இலையுதிர்காலம், வஸந்த காலம், வேனல்காலம் இப்படி பல காலங்கள் இணைந்து உருவாவது வருடம்.
இது ஒரு காலயளவு.அந்த காலயளவில் பருவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன.
இந்த காலையளவிற்குள் உயிரினங்களின் வாசனைகளும் மாறி மாறி வருகிறது. உயிரினங்கள் தங்கள் உடலில் ஏற்படுகின்ற
மாற்றங்களை கணக்கிடுவதற்கு பயன்படுத்தும் ஒரு அளவு கோல் இது.
பிறப்பு, குழந்தைப் பருவம், பால்யம், இளைமை, வளர்ச்சி, முதுமை, இறப்பு என்ற மாற்றங்கள் உடலிற்கேறபடுகின்றன்.
இவைகளை கணக்கிடுவதற்கான அளவுகோல் வருடம் .
இந்த பருவ மாற்றங்களுக்கேற்ப மனம் உருவாக்கும் அனுபவங்களின் குணங்களும் மாறுகின்றன.
குழந்தைப் பருவத்தில் கண்டு மகிழ்நதவை இளைமையில் பொருளற்றதாக தோன்றுகிறது. இளைமையில் தன்னை வசீகரத்தவை முதுமையில் வேண்டாதவையாகின்றன.உயிரினங்களுக்கு ஏற்படும் இன்ப- துன்பங்களும் பருவத்திற்கேற்ப மாறுகின்றன.
ஆகவே பருவங்கள் சேர்ந்து உருவாகும் வருடம் என்ற காலயளவு தான் அனுபவங்கள் எனும் நீரோட்டத்திற்கு ஆதாரம்.
இந்த உண்மையை உணர்ந்தவன், அனுபங்களின் அநித்தியத்தை உணர்ந்தவன் தன்னில்- உண்மையான ‘நான்’ ல் நிலை கொள்கின்றான்.
பிரம்மத்தை அறிந்தவனாகிறான்.
பிரம்மன் வாசனைகளின் விதைகளை தாங்கி நிற்கும் விருட்சம். அந்த மரத்தில் உருவாகின்ற விதைகள் முளைத்து வாசனைகளாகின்றன.,
அந்த வாசனைகளை பூர்த்தி செய்வதற்காக உயிரினங்கள் ( ஜீவாத்மாக்கள்) தங்கள் புலன்கள் மூலம் ஆற்றும் கர்மங்கள் அனுபவங்களாக மாறுகின்றன.
ஆனால் அனுபவங்கள் காலத்திற்கேற்ப மாறுகின்றன.
மாறுகின்ற அனுபவங்களை ஆதாரமாக்கி கொண்டு நாம் காலத்தை இளைமை என்றோ முதுமை என்றோ பால்யம் என்றோ கூறுகிறோம்.
ஆகவே அனுபவங்கள் தான் காலத்திற்கு ஆதாரம்.
இந்த அனுபவங்கள், வாசனைகளை பூர்த்தி பண்ணுவதற்கான கர்மங்களிலிருந்து ந்த உருவான அனுபவங்கள்,
அதனாலுண்டாகின்ற வேதனைகள் எல்லாவற்றையும் அனுபவிப்பது ஜீவாத்மா. அந்த அனுபவங்களின் ஆழம்
ஜீவாத்மாவின் அவித்யைக் பொறுத்துள்ளது.இருளில் காணப்படும் பேயைப்போல், சரீரம் எனும் பேய்
பிரம்மனின்- பரமாத்மாவின் உண்மை சொரூபத்தையும் மறைத்து பூதாகார வடிவம் எடுக்கிறது.
இவ்வாறு ஸ்தூல உருவம் எடுக்கின்ற அல்லது ஸ்தூல சரீரத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கின்ற ஜீவாத்மா தான்
எல்லாவித அனுபவங்களுக்கும் ஆதாரம்.ஸ்தூல ரூபம் நீராகவும் மலராகவும், காற்றாகவும் மேகங்களாகவும் காலமாகவும் தோற்றமளிக்கின்றன.
நீர் அனுபவங்களையும் மலர் தகவல்களையும் தொடர்புகள் காற்றாகவும், வெளிவராத ஆசைகளும் வாசனைகளும் மேகங்களாகவும்,
தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற மாற்றங்கள் காலமாகவும் உணரப்படுகிறது.
இம்மாதிரி தோன்றுகின்ற மாயத்தோற்றங்களின் உண்மையை உணர்ந்தவன் பிரமனை உணர்ந்தவன். அவன் தன்னிலேயே நிலைகொள்ள முடிகிறது.
பிரம்மத்தின் உண்மையை அஞ்ஞானம் மறைத்து கொண்டிருக்கின்றது. ஞானம் எனும் தோணியின் உதவியுடன் தான்
அதன் சத்திய சொரூபத்தை அறியமுடியும்.
மந்த்ரம் 9
யோப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத/ ப்ரத்யேவ திஷ்டதி (9)
யாரொருவன் நீரில் நிலைபெற்றுள்ள ஓடத்தை அறிகிறானோ, அவன் அதிலேயே நிலை பெறுகிறான். (9)
எவனொருவன் பரமனின் உண்மையை அறிகிறானோ அவன் பரமனே ஆகிறான். எல்லா ஆத்மாவும் பரமாத்மாவே!
ஜீவாத்மா என்பது வாஸனைகளால் உளவான மாயத் திரையினால் மூடப்பட்ட பரமாத்மாவே! அந்த மாயத்திரை தான் அவித்யை!
அந்த அவித்யை எனும் மாயத்திரை விலகி விட்டால் பரமாத்மா வெளிப்படும்.
அது பிரம்மசாஷாத்காரம் அல்லது ஆத்ம சாக்ஷாத்காரம்.அந்த ஞானம் பெற்றுவிட்டால் அவனை லௌகீக வாசனைகள் எதுவும் பாதிக்காது.
எவ்வாறு ஓடத்தில் பயணிக்கும்பொழுது ஒருவனை வெளியிலுள்ள நீர் நனைக்காதோ
அது போல் பிரம்ம சாஷாத்காரம் அடைந்தவனை அவனை சுற்றி நடக்கும் எதுவும் பாதிக்காது.
அவன் பிரம்ம நிலையில் உறுதியாக நிலை கொள்கிறான்.
மந்த்ரம் 10
ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே/ நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே/
ஸ மே காமான் காமகாமாய மஹ்யம்/ காமேச்வரோ வைச்ரவணோ ததாது/ குபேராய வைச்ரவணாய/ மஹா ராஜாய நம: (10)
தலைவர்களுக்கெல்லாம் தலைவனும், பெரும் வெற்றிகளைக் கொடுப்பவனுமான குபேரனை நாங்கள் வணங்குகிறோம்.
விருப்பங்களை நிறைவேற்றுபவனும், செல்வத்தின் தலைவனான அவன், என் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு
எனக்குத் தேவையான செல்வத்தைக் கொடுக்கட்டும். செல்வத்தின் தலைவனான குபேரனுக்கு,மன்னாதிமன்னனுக்கு வணக்கங்கள்.
ஸாஷாத் காரத்துக்குப் பின்பு அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்ய செல்வ பிரார்த்தனையுடன் தலைக் கட்டுகிறது.
ஸ்ரீ மந்த்ர புஷ்பம் நிறைவுற்றது
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
உங்கள் கருத்து : comment