Tamil Spiritual Blog
கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு
---ஔவையார் கூறியது.
இது தனி நபருக்குச் சொந்தமான வலைப்பதிவுகளை கொண்ட இணையதளம் ஆகும். நீங்கள் ஏதேனும் பிழையோ தவறோ கண்டறிந்தால் தயவு செய்து rk@kprak.com என்ற மின்னஞ்சலுக்குத் தெரியப்படுத்தவும்.
ஆன்மிகம் என்றால் என்ன?
ஆன்மீகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல.
மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.
நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி.
இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.
கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்...நல்வாழ்வு வாழ இவை அனைத்தும் ஒரு ஐதீகம்
இத்தளம் முழுக்க முழுக்க தமிழில் எழுத்து வடிவில் அமைக்க எண்ணமுடன் துவங்கப்பட்ட இணையம் ஆகும். தமிழில் அமைந்தால் மட்டுமே போதுமா ?. இல்லை. ஆயினும் இத்தளம் தமிழில் தகவல்களை அறியும் நோக்கோடு கூகிள் தளத்தில் தேடுபவருக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் துவங்கப்பட்டதாகும்.
தமிழ் வடிவில் சில பக்கங்கள் இல்லாவிடினும், இனிவரும் பதிவுகள் தமிழில் அமையும் என்கின்ற நம்பிக்கையில் தமிழ்காட்.ஆர்கு உலா வருகின்றது. இந்த இணையதளத்தில் காணப்படும் பெரும்பாலானச் செய்திகள் (இடுகைகள்) யாவும் வலைதளத்தில் தேடல் மேற்கொண்டு படித்து தெரிந்துகொண்ட பின்னர் (எனது பொழுதுபோக்கு) வெளியிடப்பட்டவை ஆகும்.
அவ்வாறு பிழையிருந்தால் தயவுசெய்து நீங்கள் rk@kprak.com என்ற மின்னஞ்சலுக்குத் தெரியப்படுத்தவும்.
தவறுகள் திருத்தப்படும். வேண்டாத பதிவுகள் நீக்கப்படும் . நன்றி.
Tamilgod.Org main website
Tamil Spiritual Blog : Religious Blog with resources like books, thoughts and opinions regarding spiritual beliefs and practices
Tamilgod.org, ஆன்மீகத் தேடல், தகவல்கள் & சிந்தனை - devotional song lyrics, spiritual readings even values and principles. Hoping that, through this spiritual blog, I would be able to inspire and motivate you to keep strengthening your faith.
Tamilgod.Org Other Web Sections
Tamilgod.org a kind of web portal provides latest news, updates on science, internet, medical, software, electronic devices or gadgets technology for tamil people in tamil (.ta) language. South Indian portal in Tamil and English only version of articles specializes in topics covering categories tamil cinema, film production, dictionary in tamil, general knowledge and various articles about world, technologies, science, beauty, health tips, baby care, recipe, lyrics, poetry and more.
Tamil Daily Calendar (https://calendar.tamilgod.org), Tamil General Knowledge (https://gk.tamilgod.org), Babynames in Tamil (https://babynames.tamilgod.org), Tamil Film Song Lyrics (https://lyrics.tamilgod.org).
உங்கள் கருத்து : comment