திருப்பதி : ஸ்ரீவாணி அறக்கட்டளையின் VIP தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் 13ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறந்திருக்கும்.

திருப்பதி : ஸ்ரீவாணி அறக்கட்டளையின் VIP தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் (thirupati devasthanam) நாளை டிச‌. 28ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிதாக துவங்கிய ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன டிக்கட்டுகள் வழங்கப்படுகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (Thirumalai Tirupati) ஸ்ரீவாணி அறக்கட்டளையான‌து (Sri Vani trust) அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களுக்கான விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட்டுகளை நாளை 28ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிட உள்ளது.

டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் ஆன்லைன் மூலம் ஒவ்வொரு டிக்கெடிற்கும் தலா 10,000 ரூபாய் நன்கொடையும்,டிக்கட் கட்டணமாக தலா 500 ரூபாயும் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் .வைகுண்ட ஏகாதசி தினமான 13ஆம் அடுத்த மாதம் தேதி அன்று பக்தர்கள் ஏழுமலையானை வழிபடும் வகையில் 300 ரூபாய் டிக்கெட்டுகளை ஆயிரம் எண்ணிக்கையில் நாளை மாலை ஆன்-லைனில் வெளியிடப்பட உள்ளது.

எனவே பக்தர்கள் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்வதற்கு வசதியாக 14ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை என‌ வருகினற‌ ஒன்பது நாட்களுக்கும் நாள் ஒன்றுக்கு 2000 என்ற எண்ணிக்கையில் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment