பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் : தைப்பூசத் திருவிழாவுக்கு அனுமதி உண்டா ?

தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்றும் வழிபாட்டுத்தலங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

பழனி ஆண்டவர் திருக்கோவிலில் நிகழ்வ்ய்பெற்ற‌ தங்கத்தேர் புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒமிக்ரான் மற்றும் கொரோனா மூன்றாவது அலை காரணமாக பழனி மலைக்கோயிலில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு மலைக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்றும் வழிபாட்டுத்தலங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு முருக பக்தர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தைப்பூசத் திருவிழாவும் இம்மாதம் வரவுள்ளது. இதனை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருக்க‌ துவக்கியுள்ளனர். மேலும், பல மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசின் தடை அறிவிப்பு தைப்பூசத் திருவிழா நடைபெறுமா என்ற அச்சத்தை பக்தர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment