Software

Fuchsia? Google's new operating system

ஃப்யூசியா (Fuchsia) எனும் புதிய‌ இயங்குதளத்தினை (Operating System) கூகிள் வடிவமைத்து வருவதாக பல‌ இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன‌. இன்டர்னெட் உலகில் பெருநிறுவனமான கூகிள் பல‌ தொழில்நுட்பங்களில் அகலமாக‌ ஆராய்ச்சி செய்யவும் முதலீடு செய்வது உலகறிந்த விஷயமாகும்.

உருவாக்கப்படும் ஃப்யூசியா, "நவீன கைபேசிகள் மற்றும் நவீன தனிநபர் கணினிகளைக் கருதி உருவாக்கப்பட்டதாகும்," என‌ கூகுள் தெரிவிக்கிறது. ஏற்கனவே கூஃகிளின் அன்ட்ராய்ட் மற்றும் குரோம் இயங்குதளங்கள் இசேவைகளைப் புரிந்து அதிகளவான சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஒரு தசாப்தத்திற்கு முன் விண்டோஸ் மற்றும் மேக் இருந்தது. 5 வருடங்களாக‌ அண்ட்ராய்டு மற்றும் iOS என‌ போட்டிகள் வ‌ந்தது. இப்போது ஃப்யூசியா எனும் கூகுளின் புதிய மென்பொருள். இதற்கு போட்டியாக‌ என்ன‌ வரப்போகிறதோ ??

ஃப்யூசியா இயங்குதளம் (Fuchsia OS) முழுதாக ஓப்பன் சோர்ஸ் இயங்குதளமாகவே (Open source OS) வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான‌ சான்றுகள் கீழே இருக்கும் பட்டன்களைக் கிளிக் (Please Click the buttons below) செய்து கூகிளின் இந்த‌ பிராஜக்ட் (Fuchsia Project on GitHub) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் இதன் பெயர் Pink + Purple == Fuchsia (a new Operating System) எனும் பதங்களைச் சேர்த்து உருவாகியுள்ளது என‌ github.comஇல் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
ஃப்யூசியா இயங்குதளம் (Fuchsia OS) தொடர்பான மேலும் புதிய‌ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.