சிந்திக்க சிந்திக்க தேன் மணக்கும் பாடல்
சீர்காழி கோவிந்தராஜன் பாடிய சிந்திக்க சிந்திக்க தேன் மணக்கும் பாடலின் வரிகள்
சிந்திக்க சிந்திக்க தேன் மணக்கும்
சிவ சிவ என்றிட வாய் மணக்கும்
முந்தை வினைகள் தூள் பறக்கும்
முக்தி என்றொரு நிலை பிறக்கும் (2)
அண்ணாமலையை நினைக்கயிலே
ஆனந்த வெள்ளம் இதயத்திலே (2)
உண்ணாமலையை நினைக்கயிலே
உள்ளத்தில் இன்பம் எல்லை இல்லை (2)
சிந்திக்க சிந்திக்க தேன் மணக்கும்
சிவ சிவ என்றிட வாய் மணக்கும்
தில்லையில் நடனம் ஆடுகின்றான்
அவன் திரு ஆலங்காட்டிலும் ஆடுகின்றான்(2)
கூடல் மதுரையில் கால் மாறி
நடனம் கண்டான் தமிழ் பாடி (2)
ஆரூரில் பிறக்க முக்தி உண்டு
ஆனைக்காவிலே சக்தி உண்டு (2)
பேரூரில் அவன் ஆடல் உண்டு
பேரின்பம் கூடும் பாடல் உண்டு (2)
சிந்திக்க சிந்திக்க தேன் மணக்கும்
சிவ சிவ என்றிட வாய் மணக்கும்
முன்னை வினைகள் தூள் பறக்கும்
முக்தி என்றொரு நிலை பிறக்கும் (2)
உங்கள் கருத்து : comment