வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள், சுப்பிரமணிய பாரதியார் எழுதிய சரஸ்வதி தேவி (கலைவாணி) கீர்த்தனை / கிருதி பாடல் வரிகள். Vellai thaamarai poovil iruppaal : Subramanya Bharathi - songs Tamil Lyrics
வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்திலிருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்ரொளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்துட் பொருளாவாள்
மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழிலுடைத்தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடையுற்றாள்
இன்பமே வடிவாகிட பெற்றாள்
வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்திலிருப்பாள்
உங்கள் கருத்து : comment