இடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் (காந்தார பஞ்சமம்)

வெளியிட்ட தேதி : 11.01.2020

இடரினும் தளரினும் (காந்தார பஞ்சமம்) பிரதோஷ பூஜை பாடல் வரிகள் - Idarinum Thalarinum Pradosham Sivan Song Tamil Lyrics

திருப்பெருந்துறை சிவனே போற்றி . . திருவிளையாடல் நாயகா போற்றி

 1. இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
  கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே
 2. இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
  அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே
 3. வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
  தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே
 4. நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
  புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே
 5. தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
  கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
 6. கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
  கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே
 7. வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
  ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே
 8. வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
  ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே
 9. பேரிடர் பெருகிஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
  ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே
 10. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
  கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே
 11. பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
  புத்தரும் சமணரும் புறன்உரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
 12. அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை யெம்இறையை
  நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
 13. வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
  நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே
 14. ---------------- திருச்சிற்றம்பலம் -------------

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.