பேசவுமொண்ணாத கோபமேதோ | Pesavumonnatha Kobametho
இராகம்- ஆஷாடகன்னடம்-ஏகதாளம்
பல்லவி
பேசவுமொண்ணாத கோபமேதோ தென்புலியூர்
அனுபல்லவி
ஈசரேயுமக்கு நானாகாதோ (பேச)
சரணங்கள்
வருந்தினானழைக்கவுமாச்சோ உம்முடன் பொருந்தாத வென்
னைச்சேர்ந்தா லேச்சோ இருந்தவிடமெல்லா மவள் பேச்சோ அ
வள்கையின் மருந்து தான் தலைக்கேறிப்போச்சோ (பேச)
மாதர் வசையாலே மனம்நோமோ வென்னைத் தள்ள நீர் தாமோ பெ
ண் பழி வீணே போமோ, காதலறியாதவர் நீர்தாமோ சுந்தரனார்
தூதரே யிப்படி செய்யலாமோ (பேச)
கொந்தலர மளியிற்சேர்ந்தீரே சேர்ந்தணைந்து சந்ததம் நீங்காம
யல் தந்தீரே, அந்தமின்னார் தம்மைநினைந்தீரே சிவகாமசுந்தரிபா
கரே மறந்தீரே (பேச)
Pesavumonnatha Kobametho Muthuthandavar Keerthanai
பேசவுமொண்ணாத கோபமேதோ கீர்த்தனம் திரு.முத்து தாண்டவர் அவர்களால் (1560-1640, தேதிகள் நிச்சயமற்றது) இயற்றப்பட்டது.
உங்கள் கருத்து : comment