வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட முருகன் பாடல் வரிகள் சூலமங்கலம் சகோதரிகள் பாடல்கள். Vel Vandhu Vinai Theerka Song Lyrics | Sulamangalam Sisters Murugan Song | Tamil Devotional Song.
வேல் வந்து வினை தீர்க்க
மயில் வந்து வழிகாட்ட
கோவிலுக்குள் சென்றேனடி
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி
வேல் வந்து வினை தீர்க்க
மயில் வந்து வழிகாட்ட
கோவிலுக்குள் சென்றேனடி
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி
பால் கொண்டு நீராட்டி
பழம்தந்து பாராட்டி
பால் கொண்டு நீராட்டி
பழம்தந்து பாராட்டி
பூமாலை போட்டேனடி
திருப்புகழ் மாலை கேட்டேனடி
பூமாலை போட்டேனடி
திருப்புகழ் மாலை கேட்டேனடி (வேல் வந்து )
பங்குனியின் உத்திரத்தில்
பழனிமலை உச்சியினில்
பங்குனியின் உத்திரத்தில்
பழனிமலை உச்சியினில்
கந்தன் எனைக் கண்டானடி
கந்தன் எனைக் கண்டானடி
எந்தன் சிந்தையில் நின்றானடி (வேல் வந்து )
வேலழகும் மயிலழகும்
வீற்றிருக்கும் பேரழகும்
வேலழகும் மயிலழகும்
வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி
அந்த காட்சி என்றும் இனிக்குமடி
காலமெல்லாம் இருக்குமடி
அந்த காட்சி என்றும் இனிக்குமடி (வேல் வந்து )
உங்கள் கருத்து : comment