வைகறைப் பொழுதில் விழித்தேன் - அந்த வடிவேல் முருகனை நினைத்தேன் பாடல் வரிகள். பி.சுசீலா பாடிய முருகன் பக்திப் பாடல். Vaigarai pozhuthil vizhithein - P Suseela Songs - Murugan Devotional Song lyrics.
வைகறைப் பொழுதில் விழித்தேன் - அந்த
வடிவேல் முருகனை நினைத்தேன்
நெஞ்சத்தை மலராய்த் தொடுத்தேன் - அவன்
நினைவில் காலத்தைக் கழித்தேன்!
(வைகறைப் பொழுதில்)
திருப்புகழ்த் தேரில் இழுத்தேன் - அதை
தினமும் மனத்தால் சுவைத்தேன் - என்
தேவைகள் யாவையும் உரைத்தேன் - அவன்
திருவருள் தந்தான் களித்தேன்!
(வைகறைப் பொழுதில்)
உள்ளத்தில் கோயிலை அமைத்தேன் - பக்தி
உணர்வில் ராகத்தை வளர்த்தேன்
ஓம் எனும் மந்தரம் படித்தேன் - அவன்
கருணையைப் பொழிந்தேன் மகிழ்ந்தேன்!
(வைகறைப் பொழுதில்)
சூடிடும் குறிஞ்சி மலராவான் - அவன்
ஏந்திடும் தீபத்தின் ஒளியாவான் - மெய்
அருள் வரும் ஞானக் களியாவான் - என்றும்
அவனே வாழ்வுக்கே உயிராவான்!
(வைகறைப் பொழுதில்)
உங்கள் கருத்து : comment