சொல்லில் தமிழை வைத்து பாடல்
சொல்லில் தமிழை வைத்து பாடல் வரிகள் | Sollil Tamizhai vaithu Song Tamil Lyrics
சொல்லில் தமிழை வைத்து
பொருளில் உன்னை வைத்தால்
நல்ல கவிதை வரும் ... முருகா
நால்வகை இன்பம் வரும்
(சொல்லில் ... )
செம்மை மனம் வளர்த்து
சேவலை அங்குவைத்தால் (2)
முன்மை பிறப்பினிலும் ...
முருகா முக்தியும்
கொடுப்பவன் நீ
(சொல்லில் ... )
கற்பனைச் சோலை வைத்து
கலை மயில் ஆட வைத்தால் (2)
அற்புதம் கோடி உண்டு ...
முருகா அழியும் வினை இரண்டு
(சொல்லில் ... )
பார்வையில் குன்றம் வைத்து
பாசத்தில் உன்னை வைத்தால்
ஓர் ஒளி காட்டிவைப்பாய் ... முருகா
ஓம் என கூட்டிவைப்பாய்
(சொல்லில் ... )
முருகா ... முருகா ... முருகா ...
முருகா ... முருகா ... முருகா.
உங்கள் கருத்து : comment