வெளியிட்ட தேதி : 03.03.2021
Instagram live rooms
Gadgets

Instagram Gets Major Live Rooms Update

எப்போதும் பிரபலமானதும் மற்றும் இப்போது பேஸ்புக்கிற்கு சொந்தமான புகைப்பட பகிர்வு தளமான இன்ஸ்டாகிராம் (Facebook-owned photo sharing platform Instagram) மற்றொரு பிரபலமான பயன்பாட்டுடன் போட்டியிட புதிய புதுப்பிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலை வீடியோ சாட் வசதியில் ஒரு புதுபிப்பினை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதுவரை இன்ஸ்டாகிராமில் நேரலை வீடியோ ஸ்டிரீமிங்கில் ஒருவர் மட்டுமே இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. தற்போது ஒரே சமயத்தில் நான்கு பேர் ஒன்றிணைந்து நேரலை ஸ்டிரீமிங் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கிளப்ஹவுஸ் செயலி (Clubhouse app) 10 க்கும் மேற்பட்டவர்களை ஒரே நேரத்தில் பேச அனுமதிக்கிறது. ஃபேஸ்புக் எப்போதுமே கிளப்ஹவுஸ் செயலியின் அம்சத்துடன் போட்டியிட முயற்சிக்கின்றது என‌ இணையதள‌ பக்கங்கள் தெரிவிக்கின்றன‌.
எலோன் மஸ்க் மற்றும் பிற பிரபலங்கள் iOS அடிப்ப்டையிலான‌ கிளப்ஹவுஸ் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்தே கிளப்ஹவுஸ் வீடியோ சாட் பயன்பாடு மிகவும் பிரபலமாகிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கிளப்ஹவுஸ் இப்போது அண்ட்ராய்டு (Android) பதிப்பை உருவாக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் இப்புதிய வசதியை லைவ் ரூம்ஸ் என அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நேரடி ஒளிபரப்பைப் பயன்படுத்தி நான்கு பேர் ஒருவருக்கொருவர் வீடியோ ஸ்டிரீமிங்கில் பங்குகொண்டு சாட் செய்ய‌ அனுமதிக்கும். முன்னதாக‌, இன்ஸ்டாகிராம் லைவ்ஸ் இல் இரண்டு பேரை மட்டுமே சாட் செய்ய‌ அனுமதித்தது. ஆனால் இப்போது அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்ற நிலையில் லைவ் வீடியோ சாட்டிங் (video chats) நடத்துவதற்கான நவீன வழியை இன்ஸ்டாகிராம் கையாண்டுள்ளது .

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் தனது வலைதளத்தில் "நேரலையில் இதுபோன்ற அம்சம் புது வாய்ப்புகளை உருவாக்க வழி செய்யும், இதை கொண்டு விவாத நிகழ்ச்சி, மற்ற கலைஞர்களுடன் உரையாடல், பேட்டி அல்லது நண்பர்களுடன் இணைந்து உரையாட முடியும்." என தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் லைவ் ரூம்களுடன் (Instagram Live Rooms) அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் செட்டிங்ஸ்களைப் பொறுத்து அதிக பங்கேற்பாளர்களையும் அனுமதிக்கும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.