ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றிப்.. பஞ்சுத் திரி போட்டுப் பசும் நெய் தனை ஊற்றிக்..திரு விளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக! அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக! பாடல் வரிகள். Thiruvilakai Yetri Vaithom Thirumagaley Varuga Kulam Vilanga Engal Veetil Golu Viruka Varuga Alai Magale Varuga Ishwaryam Tharuga Lakshmi Devi song (Amman Songs) by P Suseela- Tamil Lyrics
ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றிப்..
பஞ்சுத் திரி போட்டுப் பசும் நெய் தனை ஊற்றிக்..
குங்குமத்தில் பொட்டிட்டக் கோல மஞ்சள் தானமிட்டுப்..
பூமாலை சூட்டி வைத்துப் பூஜிப்போம் உன்னை............. திருமகளே!
திரு விளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக!
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!
(திருவிளக்கை)
வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லக்ஷ்மிகரம்
நெற்றியிலே ஸ்ரீசூர்ணம் நெஞ்சினிலே லக்ஷ்மிகரம்
அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்பமயம்
அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் க்ஷேம மயம்
(அலைமகளே வருக)
மாவிலையும் தோரணமும் மங்களத்தின் அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஓரு வாசம்
அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்!
சங்கு சக்ரதாரி நமஸ்காரம்!
சகலவரம் தருவாய் நமஸ்காரம்!
பத்ம பீட தேவி நமஸ்காரம்!
பக்தர் தமைக் காப்பாய் நமஸ்காரம்!!!
உங்கள் கருத்து : comment