மகாலட்சுமி 108 போற்றி | Mahalakshmi 108 potri in tamil

மகாலட்சுமி 108 போற்றி | Mahalakshmi 108 potri in tamil

Mahalakshmi 108 potri in tamil | மகாலட்சுமி 108 போற்றி

.

ஸ்ரீலட்சுமி தேவிக்கு உகந்த 108 போற்றி

  1. ஓம் திருவே போற்றி
  2. ஓம் திருவளர் தாயே போற்றி
  3. ஓம் திருமாலின் தேவி போற்றி
  4. ஓம் திருவெலாம் தருவாய் போற்றி
  5. ஓம் திருத்தொண்டர் மணியே போற்றி
  6. ஓம் திருப்புக ழுடையாய் போற்றி
  7. ஓம் திருஞான வல்லி போற்றி
  8. ஓம் திருவருட் செல்வி போற்றி
  9. ஓம் திருமால் மகிழ்வாய் போற்றி
  10. ஓம் திருமார்பி லமர்ந்தாய் போற்றி
  11. ஓம் தினமெமைக் காப்பாய் போற்றி
  12. ஓம் தீபசோதியே போற்றி
  13. ஓம் தீதெலாம் தீர்ப்பாய் போற்றி
  14. ஓம் தூப ஜோதியே போற்றி
  15. ஓம் துயரம்தீர்த் தருள்வாய் போற்றி
  16. ஓம் திருப்பாற் கடலாய் போற்றி
  17. ஓம் திருவமு தருள்வாய் போற்றி
  18. ஓம் அன்னையே அருளே போற்றி
  19. ஓம் அழகெலாம் உடையாய் போற்றி
  20. ஓம் அயன்பெறு தாயே போற்றி
  21. ஓம் அனைவருக்கும் அருள்வாய் போற்றி
  22. ஓம் அமரர் குல விளக்கே போற்றி
  23. ஓம் அமரேசன் தொழுவாய் போற்றி
  24. ஓம் அன்பருக் கினியாய் போற்றி
  25. ஓம் அண்டங்கள் காப்பாய் போற்றி
  26. ஓம் ஆனந்த வல்லியே போற்றி
  27. ஓம் ஆருயிர்க் குயிரே போற்றி
  28. ஓம் ஆவிநல் வடிவே போற்றி
  29. ஓம் ஆக்கம் தருள்வாய் போற்றி
  30. ஓம் இச்சை கிரியை போற்றி
  31. ஓம் இருள்தனைக் கடிவாய் போற்றி
  32. ஓம் இன்பப் பெருக்கே போற்றி
  33. ஓம் இகபர சுகமே போற்றி
  34. ஓம் ஈகையின் பொலிவே போற்றி
  35. ஓம் ஈடிலா அன்னை போற்றி
  36. ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
  37. ஓம் எண்குண வல்லி போற்றி
  38. ஓம் ஓங்கார சத்தி போற்றி
  39. ஓம் ஒளிமிகு தேவி போற்றி
  40. ஓம் கற்பக வல்லி போற்றி
  41. ஓம் காமரு தேவி போற்றி
  42. ஓம் கனக வல்லியே போற்றி
  43. ஓம் கருணாம் பிகையே போற்றி
  44. ஓம் குத்து விளக்கே போற்றி
  45. ஓம் குலமகள் தொழுவாய் போற்றி
  46. ஓம் மங்கல விளக்கே போற்றி
  47. ஓம் மங்கையர் தொழுவாய் போற்றி
  48. ஓம் தூங்காத விளக்கே போற்றி
  49. ஓம் தூயவர் தொழுவாய் போற்றி
  50. ஓம் பங்கஜ வல்லி போற்றி
  51. ஓம் பாவலர் பணிவாய் போற்றி
  52. ஓம் பொன்னி அம்மையே போற்றி
  53. ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
  54. ஓம் நாரணன் நங்கையே போற்றி
  55. ஓம் நாவலர் துதிப்பாய் போற்றி
  56. ஓம் நவரத்தின மணியே போற்றி
  57. ஓம் நவநிதி நீயே போற்றி
  58. ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி
  59. ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி
  60. ஓம் ஆதிலட்சுமியே போற்றி
  61. ஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி
  62. ஓம் கஜலட்சுமியே போற்றி
  63. ஓம் கள்ளமும் கரைப்பாய் போற்றி
  64. ஓம் தைரியலட்சுமியே போற்றி
  65. ஓம் தயக்கமும் தவிர்ப்பாய் போற்றி
  66. ஓம் தனலட்சுமியே போற்றி
  67. ஓம் தனதானியம் தருவாய் போற்றி
  68. ஓம் விஜயலட்சுமியே போற்றி
  69. ஓம் வெற்றியைத் தருவாய் போற்றி
  70. ஓம் வரலட்சுமியே போற்றி
  71. ஓம் வரமெலாம் தருவாய் போற்றி
  72. ஓம் முத்துலட்சுமியே போற்றி
  73. ஓம் முக்தியை அருள்வாய் போற்றி
  74. ஓம் பூவேந்தர் தொழுவாய் போற்றி
  75. ஓம் முத்தமிழ் தருவாய் போற்றி
  76. ஓம் கண்ணே எம் கருத்தே போற்றி
  77. ஓம் கவலையை ஒழிப்பாய் போற்றி
  78. ஓம் விண்ணே எம் விதியே போற்றி
  79. ஓம் விவேகம் தருள்வாய் போற்றி
  80. ஓம் பொன்னேநன் மணியே போற்றி
  81. ஓம் போகம் தருள்வாய் போற்றி
  82. ஓம் பூதேவி தாயே போற்றி
  83. ஓம் புகழெலாம் தருவாய் போற்றி
  84. ஓம் சீதேவி தாயே போற்றி
  85. ஓம் சிறப்பெலாம் அருள்வாய் போற்றி
  86. ஓம் மதிவதன வல்லி போற்றி
  87. ஓம் மாண்பெலாம் தருவாய் போற்றி
  88. ஓம் நித்திய கல்யாணி போற்றி
  89. ஓம் நீதிநெறி அருள்வாய் போற்றி
  90. ஓம் கமலக்கன்னி போற்றி
  91. ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி
  92. ஓம் தாமரைத் தாயாய் போற்றி
  93. ஓம் தவநிலை அருள்வாய் போற்றி
  94. ஓம் கலைஞானச் செல்வி போற்றி
  95. ஓம் கலைஞருக் கருள்வாய் போற்றி
  96. ஓம் அருள்ஞானச் செல்வி போற்றி
  97. ஓம் அறிஞருக் கருள்வாய் போற்றி
  98. ஓம் எளியவர்க் கருள்வாய் போற்றி
  99. ஓம் ஏழ்மையைப் போக்குவாய் போற்றி
  100. ஓம் வறியவர்க் கருள்வாய் போற்றி
  101. ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி
  102. ஓம் வேத வல்லியே போற்றி
  103. ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
  104. ஓம் பிறர்பொருள் கவர எண்ணாப் பெரியர்க் கருள்வாய் போற்றி
  105. ஓம் நடுநிலை நீங்கிடாத நல்லவர்க் கருள்வாய் போற்றி
  106. ஓம் அறநெறி வழுவிலாத அடியவர்க் கருள்வாய் போற்றி
  107. ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
  108. ஓம் அருள்மிகு லட்சுமிதாயே

போற்றி போற்றி போற்றி !!

வரலட்சுமி விரதம்

நமது வீட்டில் செல்வத்தை பெருக்க வெள்ளிக்கிழமை மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் வீட்டில் உள்ள லஷ்மி படம் முன்பு விளக்கேற்றி இந்த மந்திரத்தை சொல்லி வர நமது செல்வத்தை பெருக்கிக் கொள்ள மகாலட்சுமியின் அருள் கிட்டும். வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்கள் லட்சுமி தேவிக்கு உகந்த இந்த 108 ஸ்ரீலட்சுமி போற்றி சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை. எந்தக் குறையுமின்றி சகல செல்வங்களுடன் முதலில் தோன்றியவள் ஆதிலட்சுமி. அவளை வணங்குவதால், நோய்கள் நீங்கும் சௌபாக்கியம் பெருகும். அதற்காக அஷ்டமங்கலப் பொருட்களைத் தனது திருவடியின் கீழ் கொண்டு காட்சி தரும் வகையில் அமைந்து அருள் தருபவள் ஆதிலட்சுமி.

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment

Follow Us

www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.
Connect with us

Browse Lyrics

ஸ்லோக‌, மந்திர‌ வரிகள்

  1. மந்திரங்கள்Mantras, Manthiram
  2. ஸ்தோத்திரங்கள்Stotras
  3. 108 போற்றிகள்108 Pottri
  4. சஹஸ்ர‌நாமம்சஹஸ்ர‌நாம ஸ்தோத்திரங்கள்
  5. ஸ்லோகம்Slokam, Slokas
  6. ஸூக்தம்Sukthams
  7. அஷ்டகம்Ashtakams, Sanskrit hymns

தெய்வங்கள்

  1. பிள்ளையார் பாடல்கள்Sree Gansesha Songs
  2. முருகன் பாடல்கள்Murugan Songs
  3. சிவன் பாடல்கள்Shiva Songs
  4. பெருமாள் பாடல்கள்Vishnu, Perumal Songs
  5. ஐயப்பன்Ayyappan Songs
  6. கண்ணன் பாடல்கள்Krishna, Kannan Songs
  7. ஸ்ரீ இராமன் பாடல்கள்Sri Rama Songs
  8. ஹனுமான் பாடல்கள்Jai Hanuman Songs
  9. தக்ஷிணாமூர்த்தி பாடல்கள்Dakshinamurthy Songs
  10. வராஹ‌மூர்த்தி பாடல்கள்Varaha moorthy Songs
  11. தன்வந்திரி பாடல்கள்Dhanvantri Songs
  12. பைரவர் பாடல்கள்Bhairavar Songs
  13. கருப்பசுவாமி பாடல்கள்Karuppa Samy Songs
  14. அனைத்து தெய்வ பாடல்கள்All deities Devotional Lyrics

தேவி பாடல்கள்

  1. சரஸ்வதிSaraswathi Devi Songs
  2. லட்சுமிLakshmi Devi Songs
  3. அம்மன் பாடல்கள்Amman Bakthi Paadalgal
  4. துர்கை அம்மன்Durga Devi Songs
  5. மீனாட்சி அம்மன்Meenakshi Amman Songs
  6. காளிகாம்பாள் பாடல்கள்Kali Amman Songs
  7. காமாட்சி அம்மன் பாடல்கள்Kamatchi Amman Songs
  8. லலிதாம்பிகை பாடல்கள்Lalithambigai Songs
  9. மாரியம்மன் பாடல்கள்Mariamman Songs
  10. அன்னபூர்ணா தேவி பாடல்கள்Annapurna Songs
  11. கர்ப‌ ரக்ஷாம்பிகை அம்மன் Garba Rakshambigai Songs
  12. புவனேஸ்வரி அம்மன் Bhuvaneshwari Songs
  13. வராஹி அம்மன் பாடல்கள்Varahi Amman Songs
  14. கருமாரி அம்மன் பாடல்கள்Karumari Amman Songs

விரத பாடல்கள்

  1. பிரதோஷம்Pradosham Special songs
  2. கந்த‌ சஷ்டி கவசம்Kandha Sasti Kavasam
  3. ஏகாதசி பாடல்கள்Ekadasi Special Songs
  4. நவராத்திரி பாடல்கள்Navarathiri Special Songs
  5. அபிராமி அந்தாதி பாடல்கள்Abirami Andhathi Songs
  6. பாவை நோன்பு பாடல்கள் Paavai Nonbu Songs

Share this Page

Follow Us