சென்று வா நீ ராதே இந்தப் போதே - ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் கண்ணன் பாட்டு மற்றும் பாடல் வரிகள். Sendru Vaa Nee Radhe Intha-podhe ini sindhanai seythida neramillaiyadi - Kannan/ Sree Krishna Songs by Othukadu Venkatasubbiyer song Lyrics
பல்லவி (கல்யாணி)
சென்று வா நீ ராதே இந்தப் போதே
இனி சிந்தனை செய்திட நேரமில்லையடி
அனுபல்லவி (கல்யாணி)
கன்று பசு மேய்க்கும் நாட்டத்திலே
அவரை காண வரும் ஆயர் கூட்டத்திலே
சற்று நின்று பேச என்றால் நேரமில்லையடி
நேரில் வர ஒரு தோதுமில்லையடி
சரணம்1 (காம்போஜி)
சொன்னாலும் புரியாதே -உனக்கு
தன்னாலும் தோன்றாதே
அந்த மன்னனை நம்பாதே
அந்த மாயன் வாக்கு எல்லாம் மண் தின்ற வாய்தானே
சரணம்2 (வசந்தா)
உலகை அளந்தோர்க்கு உன்னிடம் வந்தொரு
பொய் மூட்டி அளப்பதும் பாரமா
கண்ணன் நலம் வந்து ஆயிரம் சொன்னாலும்
நாம் அதை நம்பிவிடல் ஞாயமா
ஆயர்குலத் திறைவன் நந்தகோபன் திருமகன்
கொள்வதெல்லாம் (alt: சொல்வதெல்லாம்) உண்மையாகுமா
நம் தலத்தருகே இன்று தனித்து வர என்றால்
தவப்பயன் ஆகுமே வினைப்பயன் போகுமே
உங்கள் கருத்து : comment