கண்டதுண்டோ கண்ணன் போல் புவியில் கண்டதுண்டோ கண்ணன் போலே சகியே கிருஷ்ணன் பக்தி பாடல் வரிகள் .Kandathundo Kannan Pol Puviyil Sahiye Krishna Classical Songs Lyrics in Tamil.
கண்டதுண்டோ கண்ணன் போல் புவியில்
கண்டதுண்டோ கண்ணன் போல் புவியில்
கண்டதுண்டோ கண்ணன் போலே சகியே
* வானமுகில் போலும் மேனி வண்ணம் கொண்டான்
நானிலம் மயங்க கானம் பயில்வான்
ஆயர்பாடி தன்னில் ஆனிரைகள் மேய்ப்பான்
நேயமாக பேசி நெஞ்சம் புகுவான் (இரண்டு முறை)
* கண்மணி நீ என்பான் கைவிடேன் என்பான் (கண்டதுண்டோ)
கண்ணன் தான் கண்ணிமைத்தால் காணான்
கண்ணா கண்ணா கண்ணா
என்று நான் கதறிடும் போதனில் (இரண்டு முறை)
பண்ணிசைத்தே வருவான் சகியே (கண்டதுண்டோ)
உங்கள் கருத்து : comment