வெளியிட்ட தேதி : 08.10.2018
Infant Jesus
ஆன்மீகம்

Aa Ambara Umbaramum Pugalnthiru

ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு கிறிஸ்து பிறப்பு பாடல்கள் வ‌ரிகள்.Aa Ambara Umbaramum Pugalnthiru Jesus Birth Christian Songs Tamil Lyrics.
பல்லவி

ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்

அனுபல்லவி
ஆதிபன் பிறந்தார் - அமலாதிபன் சரணங்கள்

1. அன்பான பரனே! - அருள் மேவுங் காரணனே! - நவ
அச்சய சச்சித - ரட்சகனாகிய
உச்சிதவரனே! --- ஆ! அம்பர

2. ஆதம் பவமற, - நீதம் நிறைவேற, - அன்று
அல்லிராவினில் - தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார். --- ஆ! அம்பர

3. ஞானியர் தேட , - வானவர் பாட , -மிக
நன்னய , உன்னத - பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார். --- ஆ! அம்பர

4. கோனவர் நாட , - தானவா கொண்டாட - என்று
கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே , யூத
கோத்திரன் பிறந்தார். --- ஆ! அம்பர

5. விண்ணுடு தோண , - மன்னவர் பேண , - ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார். --- ஆ! அம்பர

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.