கோபியரே கோபியரே கொஞ்சும் இளம் வஞ்சியரே! பாடல் வரிகள் : கண்ணதாசன் பாடல் வரிகள். கவியரசு கண்ணதாசன் எழுதிய பக்தி பாடல்கள். Gopiyare Gopiyare Kannan / Krishnan Songs by Kannadasan . Gopiyare Gopiyare song Tamil Lyrics
Gopiyare Gopiyare Song Tamil Lyrics
கோபியரே கோபியரே கொஞ்சும் இளம் வஞ்சியரே! பாடல் வரிகள்
கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!
வேங்கடத்து மலைதனிலே,வெண்முகிலாய் மாறுங்களே!
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே!
கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!
நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே!
பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே!
சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்!
மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்!
கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!
ஆழிமழைக் கண்ணன் அவன், அழகுநகை மன்னன் அவன்!
தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்!
நாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன்
நந்தகுல யாதவர்க்கு, ராகவ பாலன் அவன்!!
கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!
கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!
உங்கள் கருத்து : comment