Sony Xperia Touch, projector
Gears

Sony Xperia Touch, projector turns any table or wall into a 23" Touch Device

சோனியால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்பீரியா டச் எந்த ஒரு தட்டையான பரப்பையும் 23 அங்குலம் அகலமான தொடுதிரையாக‌ (23-inch wide touchscreen) மாற்றிவிடும்.

இயல்புநிலையில் 23 அங்குல அளவுடையதும், 80 இன்ச் வரை அளவுக்கு பெரிது படுத்திக்கொள்ளலாம் (அதிகபட்ச அளவு) - வீட்டில் திரைப்பட திரைக்கு சரியானடய் இருக்கும். பெரிதாக்கப்பட்டாலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு படக்காட்சி கூர்மையானதாக இருக்கும்.

தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்டு செயல்படும் Sony Xperia Touch புரொஜெக்டர் சுவர்களில் பெரிய பிம்பங்களை உருவாக்கி மொபைல் கருவிகளில் தொடுகை செய்து உள்ளீடுகளை (Input) வழங்குவதைப் போல‌ செயல்புரியும்.

எக்ஸ்பீரியா டச் புரொஜக்டர் ஆனது ஊடாடு (Interactive) முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் சுவாரசியமான‌ ஒலி தரம், USB-C மற்றும் HDMI வகை- D உள்ளீடுகளும் கொண்டது. எனவே நீங்கள் உங்கள் மடிக்கணினி (லாப்டாப்) அல்லது கைபேசிகளைச் செருகி உங்கள் கருவியின் திரையினை பெரிதுபடுத்தி ப்ரொஜெக்ட் செய்து பயன்படுத்த முடியும்

இதன் விலையானது 1,300 பவுண்ட்களில் இருந்து ஆரம்பமாகின்றது.