வெளியிட்ட தேதி : 11.02.2021
Google removes 100 fraudulent instant loan apps in India
பணம் முதலீடு

Google removes 100 fraudulent instant loan apps in India

கூகிள் தனது பிளேஸ்டோரில் (Google PlayStore) இருந்து இதுவரை சுமார் 100 உடனடி கடன் வழங்கும் செயலிகளை அகற்றியுள்ளது. அவை, கூகுள் விதிகளுக்கு புறம்பாக தனிநபர் விவரங்களை சேகரித்து, அவற்றை கொண்டு அச்சுறுத்தல் செய்தல், மக்களை பயமுறுத்துதல், தவறான வகையில் கடன்களை திரும்ப வசூலித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (the Ministry of Electronics & Information Technology (MeitY) சார்பில் கூகுள் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), முறையான பொது கடன் நடவடிக்கைகளானது வங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படலாம் என்றும், என்.பி.எப்.சி'ஸ் (NBFCs registered with RBI) போன்ற பண கடன் சட்டங்கள் கீழ் மாநில அரசுகள் மூலம் கட்டுப்படுத்தப்ப‌ட்ட‌ இதர நிறுவனங்களால் முறையான பொது கடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று கூறுகிறது.

கூகிள் பிளேஸ்டோர் உட்பட பல‌ இணையத்தில் கிடைக்கக்கூடிய உடனடி கடன் விண்ணப்பங்கள் மூலம் மோசடிகள் மற்றும் முறைகேடுகளை குறித்த‌ பிரச்சினைகள் பலவற்றை பெற்றதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தகவல்களின் அடிப்படையில் டிசம்பர் 2020 முதல் ஜனவரி 20, 2021 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 100 செயலிகளை கூகுள் நீக்கி இருக்கிறது. அதுமட்டுமின்றி இதுபோன்ற நூற்றுக்கணக்கான செயலிகளை ஆய்வு செய்து, தவறான செயல்களில் ஈடுபட்ட செயலிகள் உடனடியாக நீக்கப்பட்டதாக கூகுள் தெரிவித்து இருக்கிறது.

மேலும் இது போன்ற‌ சேவைகளை தொடர்ந்து வழங்கி வரும் இதர செயலிகள் உள்ளூர் சட்ட விதிகளுக்கு உட்பட வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து என்பது குறிப்பிடத்தக்தாகும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.