சுபகாரியங்களுக்கும், தெய்வ வழிபாட்டிற்கும் தேங்காய் உடைப்பது ஏன் தெரியுமா?

பொதுவாக, ஆலயம் சென்று அர்ச்சனை செய்ய‌ விரும்புவோர் தேங்காயை கண்டிப்பாக எடுத்து செல்வர். ஏன் தேங்காய் உடைக்க‌ வேண்டும் ?.

பொதுவாக, ஆலயம் சென்று அர்ச்சனை செய்ய‌ விரும்புவோர் தேங்காயை கண்டிப்பாக எடுத்து செல்வர். ஏன் தேங்காய் உடைக்க‌ வேண்டும் ?. தேங்காய் உடைக்கும் பாரம்பரியம் மிருக பலிக்கு மாற்றா!!.

எல்லா வழிபாட்டிலும் தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். இது ஏன்? ஏனெனில் மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் அதனை சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுசாக‌ தோலுடன் வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. ‘எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு!’ என வேண்டும் நிலையினை கருத்தில் கொண்டு தான் நாம் கடவுளுக்கு வாழைப் பழத்தை படைக்கிறோம்.

இதைப்போலவே தேங்காய்க்கும் ஒரு சிறப்புண்டு. மேலும் தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போலத்தான், வாழை மரத்திலிருந்து வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது.

அப்படி நமது எச்சில்படாத இந்த‌ பொருட்களை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். தொன்றுதொட்டு இந்த மரபினைப் பின்பற்றி வழிபட்டும் வருகின்றோம்.

தேங்காய் உடைப்பதன் சிறப்புகள்

1. தேங்காயை கடவுளுக்கு சமர்பிப்பதால் அதிர்ஷ்டங்கள் பெருகும். தேங்காய் பிரசாதம் கொடுத்தால்தான் கடவுள் தரிசனம் நிறைவேறும் என்றும் நம்ப‌ப்படுகிறது.

2. தேங்காய் பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரரின் சின்னமாக கூறப்படுகிறது. தேங்காய் நீரும் புனிதமாக கருதப்படுகிறது. தேங்காய் நீர் எதிர்மறை சக்தி மற்றும் வீட்டில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகளை நீக்கும் என்றும் நம்பப்படுகிறது. அதனால்தான் வீடு கட்டுவதற்கான அடித்தளத்தின் போது தேங்காய் உடைத்து தொடங்குகிறார்கள்.

3. சுபகாரியங்கள், புதியதாக எதுவாக இருந்தாலும், தொழில் தொடங்கும் போதும் தேங்காய் உடைத்து ஆரம்பிப்பது, இந்து மதத்தில் உள்ள மரபு. அவ்வாறு செய்வதால் தடையின்றி வெற்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

4. இந்து புராணங்களின்படி, விஷ்ணு பூமிக்கு வந்தபோது, ​​மனிதர்களின் வசதிக்காக லட்சுமிதேவி, தென்னை மரம் மற்றும் காமதேனுவை அழைத்து வந்தார் என்று கூறப்படுகிறது.

5. முற்காலத்தில் மிருக பலி அதிகமாக இருந்தது. அதற்கு மாற்றாகத்தான் தேங்காய் உடைக்கும் பழக்கம் வந்தது என்ற கருத்தும் உள்ளது. தேங்காயின் வெளிப்பகுதி மிகவும் உறுதியானது. இது மனிதனின் ஈகோவுடன் ஒப்பிடப்படுகிறது. உள்ளே இருக்கும் வெள்ளை, மென்மையான பகுதி அமைதியின் சின்னமாக கருதப்படுகிறது.
"என்னில் இருக்கின்ற‌ அகந்தையினை ஒளித்துவிட்டேன், என்னை நற்செயல்கள் செய்ய‌ அனுமதி வழங்கு இறைவா" என‌ வேண்டிக்கொள்வதே தேங்காய் உடைத்து வழிபடுவதன் மகத்தும் ஆகும்.

Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment