விபூதி பூசிக்கொள்ளுதல்... மூன்று கோடுகளின் மகிமை !!
திருநீறு ஆன்மிகத்துடன் மட்டுமல்ல, ஆரோக்கிய நலத்துக்கும் உகந்தது என நவீன அறிவியல் சான்றுரைக்கின்றது.
சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.
சைவ சித்தாந்தத்தின்படி திருநீறு நான்கு வகைப்படும். அவை கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம் என்பன. கன்றுடன்கூடிய ஆரோக்கியமான பசுவின் சாணத்தை பிரம்ம மந்திரம் உச்சரித்து சிவாக்னியில் எரித்து உருவாக்குவது கல்பத் திருநீறு ஆகும். காடுகளில் மேயும் பசுக்களின் சாணங்களைக் கொண்டு எரித்து செய்வது அணுகல்பத் திருநீறு. தொழுவங்களில் வளர்க்கப்படும் பசுவிலிருந்து எடுத்து தீயில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு. இதுவே நாம் பயன்படுத்தும் திருநீறு. தரையில் விழுந்து கிடக்கும் சாணங்களை எடுத்துத் தயாரிக்கும் திருநீறு அகல்பம்.
முதல் கோடு
அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை மஹாதேவன் ஆகியவை அடங்கியது.
இரண்டாவது கோடு
உகாரம், தட்சிணஅக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர்.
மூன்றாவது கோடு
மகாரம், ஆலஹனீயம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர்.
`சாம்பலாகிவரும் திருநீறு மும்மலங்களையும் சாம்பலாக்கும்’ என்கிறது தேவாரம்.
'நீறில்லா நெற்றி பாழ்' என்கிறாள் அவ்வைப்பாட்டி. "மந்திரமாவது நீறு' என்று திருநீற்றின் (Vibhuti) மந்திரத்தன்மையைப் போற்றுகிறார் ஞானசம்பந்தர்.
** திருநீறு ஆன்மிகத்துடன் மட்டுமல்ல, ஆரோக்கிய நலத்துக்கும் உகந்தது என நவீன அறிவியல் சான்றுரைக்கின்றது. திருநீறு பூசிக்கொள்ளுகையில், கையில் எடுக்கும் போது, சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெற்றியை சற்று உயர்த்தி, "சிவசிவ' "முருகா' என்று மந்திரம் ஜெபித்தபடியே பூசவேண்டும்.
உங்கள் கருத்து : comment