அரசனைக் காணாமலிருப்போமோ?

பல்லவி
அரசனைக் காணாமலிருப்போமோ? – நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ?

அனுபல்லவி

பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்
பாடனுபவங்கனை ஒழிப்போமோ? – யூத
சரணங்கள்
1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே – யூத

2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே – அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத

3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! – அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! – நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! – யூத

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment