வாரும்... வாரும்... வாரும்...
வாரும்... வாரும்... வாரும்...வாரும்...
வாரும் ஆவியானவரே ஏழை
எந்தன் உள்ளத்திலே
எழுப்புதல் அக்கினி ஊற்றிடுமே
எழுந்து ஜொலிக்க செய்திடுமே
மோசேக்கு மகிமையை காண்பித்தீரே
எனக்கும் உம் மகிமையை காண்பியுமே
நித்தமும் ஜெபிக்க உம்மோடு இருக்க
என் மேல் இறைங்கிடுமே -- ( வாரும் ஆவியானவரே...உள்ளத்திலே )
ஆற்றலும் நீரே உண்மை நீரே
வழியும் நீரே வாழ்வும் நீரே
எனக்குள் வந்து என்னோடு இருக்க
வாருமே துணையாளரே -- ( வாரும் ஆவியானவரே...உள்ளத்திலே )
பெந்தகொஸ்தே நாளிலே இறங்கினீரே
இன்றே என் மீது இறைங்கிடுமே
இயேசுவின் சாட்சியாய் உம்மோடு வாழ
இப்போது வந்திடுமே -- ( வாரும் ஆவியானவரே...உள்ளத்திலே )
கத்தோலிக்க கிறிஸ்தவ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.