வெளியிட்ட தேதி : 03.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

செம்மறியின் விருந்துக்கு
அழைக்க பெற்றோர் பேருபெற்றோர்
அவ்விருந்தை உண்டிட
சென்றிடுவோம் இன்பம் பொங்க - ( 2 )

இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன
உறைய வரும் இறைவனை நாம் ஏற்க தடையென்ன
உள்ள கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய்
உவகை எனும் ஒளி கொணர்ந்து எம்மை ஆளுவாய் -- (செம்மறியின்...)

வானம் பொழிய பூமி விளைய வளமும் பொங்குமே
வலமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே
எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே
உந்தன் அருளை விதத்தால் இந்த உலகம் உய்யுமே -- (செம்மறியின்...)


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.