வெளியிட்ட தேதி : 01.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

நிகரே இல்லாத சர்வேசா
திகழும் ஒளி பிரகாசா
துதிபாடிட இயேசுநாதா
பதினாயிரம் நாவுகள் போதா

துங்கன் இயேசு மெய் பரிசுத்தரே
எங்கள் வேதனை தரிசிக்கவே
துதிகளுடன் கவிகளுடன்
தூய தூயனை நெருங்கிடுவோம் -- ( நிகரே )

கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
கையின் சித்திரம் தெய்வமல்ல
ஆவியோடும் உண்மையோடும்
ஆதி தேவனை வணங்கிடுவோம் -- ( நிகரே )

பொன் பொருளும் அழிந்திடுமே
மானம் மாயையும் மறைந்திடுமே
இதினும் விலை பெரும் பொருளே
இயேசு ஆண்டவர் திருவருளே -- ( நிகரே )

தேவ மைந்தனாய் அவதரித்தார்
பாவ சோதனை மடங்கடித்தார்
மனிதனுக்காய் உயிர்கொடுத்தார்
மாளும் மாந்தரை மீட்டெடுத்தார் -- ( நிகரே )

கொந்தளித்திடும் அலைகளையும்
கால் மிதித்திடும் கர்த்தரவர்
அடங்கிடுமே அதட்டிடவே
அக்கரை நாமும் சேர்ந்திடவே -- ( நிகரே )

ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
ஜீவா தேவனே உயிர்த்தெழுந்தார்
மறுபடியும் வருவேனென்றார்
மா சந்தோஷ நாள் நெருங்கிடுதே -- ( நிகரே )


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.