வெளியிட்ட தேதி : 18.01.2017
iPhone Gun
Commerce

A gun that looks like an iPhone from the Minnesota Company IDEAL Conceal

நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் இந்த‌ ஐபோன் போன்று தோற்றமளிக்கும் துப்பாக்கியினை வாங்க முடியும். அமெரிக்காவின் மினசோட்டாவைச் (Minnesota) சேர்ந்த‌ ஐடியல் கன்சீல் (IDEAL Conceal) நிறுவனம் சமீபத்தில் வெளியான ஐபோன் 7 கைபேசியைப் போன்ற‌ வடிவுடைய‌ கைத்துப்பாக்கியை தயாரித்துள்ளது.

இரு முனை உடைய‌ 9mm "ஐபோன் கன்" (9mm double-barrelled “iPhone Gun”) அமெரிக்காவில் விரைவில் விற்பனையாக‌ உள்ளதால் அதிகாரிகள் இத்துப்பாக்கிகளைத் தேடும் வேட்டையில் இறங்க‌ கேட்கப்பட்டுள்ளனர். ஒரு பருமனான உறையுடன் கூடிய‌ இந்த‌ துப்பாக்கி ஒரு ஸ்மார்ட்போனைப் போல மடித்துகொள்ள‌ (Gun that is fold-able like a smartphone) முடியும். ஆனால் விலையானது $ US395 ($ 525), உண்மையில் ஐபோனை விட மலிவாக உள்ளது.

தற்போது அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் பட்சத்தில் அது கண்டம் விட்டு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் சூழ்நிலை உள்ளது. .380 காலிபர் கைத்துப்பாக்கியானது, முன்பதிவு செய்து தற்போது கிடைக்கப்படுவதால், அது ஐரோப்பிய குற்றவாளிகளால் இறக்குமதி செய்யப்படும் எனும் அச்சமும், பயங்கரவாத அச்சம் என‌ அதிகாரிகளிடையே எல்லைகள் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்திற்கிடையே நிலவுகின்றது..

‘ஐபோன்’ வடிவிலான கைத்துப்பாக்கி அடுத்த வாரம் சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. இதற்காக‌ 12,000 முன்பதிவுகளை (விற்பனை) ஏற்கனவே ஐடியல் கன்சீல் (IDEAL Conceal) நிறுவனம் பெற்றுவிட்டது. மேலும் அதிக அளவில் கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இத்துப்பாக்கியானது தீவிரவாதிகள் கைவசம் சேர்ந்துவிட்டால் பயங்கரவாத செயல்கள் அதிகரிக்கலாம், எனவே மக்கள் மற்றும் காவல்துறை எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உஷார் !!!. ஐஃபோன் போன்று துப்பாக்கி. பார்வைக்கு ஐஃபோன் போன்றிருப்பதால் நாம் கண்டுகொள்வதற்கு வாய்ப்பில்லை. எனவே ஐபோன் வைத்திருப்பவர்களிடம் எச்சரிக்கையாக‌ இருங்கள்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.