வெளியிட்ட தேதி : 27.01.2021
59 Chinese apps banned by Indian government
அலுவல் / தொழில்

59 Chinese apps banned by Indian government

டிக்டாக், வெச்சாட், பைடு மற்றும் யுசி உலாவி உள்ளிட்ட‌ 59 சீன பயன்பாடுகளை இந்திய அரசால் நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளன. 2020ல் மத்திய அரசு இந்திய மக்களின் தகவல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுமார் 59 சீன செயலிகளைத் தற்காலிகமாகத் தடை செய்த நிகழ்வு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்போது சுமார் 59 செயலிகள் மீது நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Complete list of 59 Chinese apps banned by Indian government on June 2020 :
1. TikTok 2. SHAREit 3. Kwai 4. UC Browser 5. Baidu Maps 6. Shein 7. Clash of Kings 8. DU Battery Saver 9. Helo 10. Likee 11. YouCam Makeup 12. Mi Community 13. CM Browers 14. Virus Cleaner 15. APUS Browser 16. ROMWE 17. Club Factory 18. NewsDog
19. Beauty Plus 20. WeChat 21. UC News 22. QQ Mail 23. Weibo 24. Xender 25. QQ Music 26. QQ Newsfeed 27. Bigo Live 28. SelfieCity 29. Mail Master 30. Parallel Space 31. Mi Video Call – Xiaomi 32. WeSync 33. ES File Explorer 34. Viva Video – QU Video Inc
35. Meitu 36. Vigo Video 37. New Video Status 38. DU Recorder 39. Vault-Hide 40. Cache Cleaner DU App studio 41. DU Cleaner 42. DU Browser 43. Hago Play With New Friends 44. Cam Scanner 45. Clean Master – Cheetah Mobile 46. Wonder Camera
47. Photo Wonder 48. QQ Player 49. We Meet 50. Sweet Selfie 51. Baidu Translate 52. Vmate 53. QQ International 54. QQ Security Center 55. QQ Launcher 56. U Video 57. V fly Status Video 58. Mobile Legends 59. DU Privacy.

மத்திய அரசின் இந்த உத்தரவால் 59 செயலிகளில் அதிக வாடிக்கையாளர்களை வைத்திருந்த ஷாட் வீடியோ வழங்கும் செயலியான (short video app) டிக்டாக் மற்றும் ஹலோ (TikTok and Helo) ஆகியவற்றின் தாய் நிறுவனமான பையிட் டான்ஸ் (ByteDance) இந்திய ஊழியர்களைப் பணிநீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் 20,000க்கு அதிகமான ஊழியர்கள் சீன நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் டிக்டாக் மற்றும் ஹலோ செயலி அலுவலகங்களில் பணியாற்றிய 2000 ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு வருகிற ஜனவரி 29ஆம் தேதி தான் கடைசி நாளாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.