நளிநீ தள கத ஜலம் அதிதரளம்

தாமரை இலை மேல் நீரைப் போல் நிலையற்றது வாழ்க்கை (பஜ கோவிந்தம் 4) : நளிநீ தள கத ஜலம் அதிதரளம் தத்வத் ஜீவிதம் அதிசய சபலம் சுலோக‌ வரிகள். Naliniidalagata jalamatitaralam tadvajjiivitamatishayachapalam - Bhaja Govindham Sloka Lyrics 04 - Tamil Lyrics

நளிநீ தள கத ஜலம் அதிதரளம்
தத்வத் ஜீவிதம் அதிசய சபலம்

வித்தி வ்யாத்யபிமானக்ரஸ்தம்
லோகம் சோகஹதம் ச சமஸ்தம்

பொருள்

தாமரை இலையில் தங்கி இருக்கும் நீரானது நிலையில்லாதது. அது போல வாழ்க்கையும் மிகவும் நிலையில்லாதது இந்த உலகில் எல்லாமும் எல்லாரும் வியாதியாலும் தற்பெருமையாலும் விழுங்கப்பட்டவர்கள் மேலும் (அந்த வியாதியாலும் தற்பெருமையாலும் ஏற்படும்) சோகத்தால் அழிக்கப்பட்டவர்கள் இதை நீ அறிவாய். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்.

உங்கள் கருத்து : comment