வட்ட நல்ல //
வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவனே
வரிப்புலி வாகனனே ஐயப்பா
வந்து உன்ன பாக்க வாறோம் ஐயப்பா
எத்தனையோ மலையிருக்க
அத்தனையும் தான் கடந்து
எத்தனையோ மலையிருக்க
அத்தனையும் தான் நடந்து
சபரிமல ஆண்டவனே ஐயப்பா
சன்யாசியாய் நின்றவனே மெய்யப்பா
உச்சி மலைதனிலே ஒய்யாரமாய் அமர்ந்தவனே
உச்சி மலைதனிலே ஒய்யாரமாய் இருப்பவனே
பச்சைமால் வடிவழகா ஐயப்பா
பரதேசியாய் நாங்க வாறோம் ஐயப்பா
கண்ணனும் சிவனும் சேர கைதனிலே பிறந்தவனே
கண்ணனும் சிவனும் சேர கைதனிலே பிறந்தவனே
ஐயொப்ப தெய்வமான ஐயப்பா
காந்தமல ஜோதியான மெய்யப்பா
எருமேலி பேட்டை துள்ளி
பம்பையிலே தீர்த்தமாடி
எருமேலி பேட்டை துள்ளி
பம்பையிலே தீர்த்தமாடி
நீலிமல ஏத்தத்துலே ஐயப்பா
நிக்க வச்சு சொக்க வைப்பாய் ஐயப்பா
எங்கள நிக்க வச்சு சொக்க வைப்பாய் ஐயப்பா
வட்ட நல்ல
வட்ட நல்ல பொட்ட வச்சு வடிவழகா இருப்பவரே
வரிப்புலி வாகனனே ஐயப்பா
வந்து உன்ன பாக்க வாறோம் ஐயப்பா
ஐயப்பா
வந்து உன்ன பாக்க வாறோம்
வட்ட நல்ல பொடடு வச்சு வடிவழகா இருப்பவரே. Vatta Nalla Pottu vachu Vadivazhaga Iruppavare
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற ஐயப்பன் பாடல் : வட்ட நல்ல பொட்ட வச்சு வடிவழகா இருப்பவரே. Vatta Nalla Potta vachu Vadivazhaga Iruppavare - Thekkampatti Sundarrajan Song Lyrics - Ayyappa song Tamil Lyrics
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் அவர்களின் பாடல் நடையே தனி. கேட்டுக்கொண்டே இருக்கலாம். அந்த இறைவன் ஐயப்பனிடமே கூட்டி சென்று விடுவார். அப்படி இந்த பதிவில் உள்ள பாடலும் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் ஐயப்பன் பாடல் தனில் ஒன்றுதான். !.
சாமியே சரணம் ஐயப்பா !
உங்கள் கருத்து : comment