சபரிமலை பயணத்திலே பாட்டு பாடுங்க! சாமி சரணம் சரணம் சரணம் என்றே கோஷம் போடுங்க! ஐயப்பன் பாடல் வரிகள்.Sabarimalai Payanathile paattu padungka Sami saranam saranam Saranam Entre Kosham Podungka - Ayyappan Devotional songs Tamil Lyrics
சபரிமலை பயணத்திலே பாட்டு பாடுங்க!
சாமி சரணம் சரணம் சரணம்
என்றே கோஷம் போடுங்க!
குருசாமி பாதையிலே நடந்து வாருங்க!
அய்யன் குருநாதன் துணையிருப்பான் சேர்ந்து வாருங்க!
சந்தனப் பூ வாசம் அது எங்கே வருகுது!
அது ஹரிஹரனின் மைந்தனையே
காண வருகுது!
குங்கும பூ ஜவ்வாது மனமும் வருகுது!
அது ஐயப்பன் மேனியிலே தவழ வருகுது
சாமிய புகழ வருகுது!
பன்னீரும் திருநீறும் சேர்ந்து வருகுது!
அது ஐயனுக்கு அபிஷேகம் செய்ய வருகுது!
கர்ப்பூர சாம்ப்ராணி வாசம் வருகுது!
அது எரிமேலி சாஸ்தாவ தேடி வருகுது
அருள நாடி வருகுது!
மல்லிக பூ மரிக்கொழுந்து வாசம் வருகுது!
அது மணிகண்ட சாமிக்குதான் மாலை ஆகுது!
முல்லை மலர் வாசம் கூட பொங்கி வருகுது!
ஐயன் பாத மலர் பூஜையிலே மகிழ வருகுது
ஐயன் உடன் பேச வருகுது!
சாமி ரோஜா மலர் வாசம் கூட இங்கே வருகுது!
அது ராஜாதி ராஜனையே போற்றி வருகுது!
தாழம்பூ மனோரஞ்சிதம் வாடை வருகுது!
அது குளத்துப்புழ பாலகன கொண்டு வருகுது
நெஞ்சம் குளிர வருகுது!
சபரிமலை பயணத்திலே பாட்டு பாடுங்க!
சாமி சரணம் சரணம் சரணம்
என்றே கோஷம் போடுங்க!
குருசாமி பாதையிலே நடந்து வாருங்க!
ஐயன் குருநாதன் துணையிருப்பான்
சேர்ந்து வாருங்கள்!
உங்கள் கருத்து : comment