கன்னிமூல கணபதி சரணம் உன் திருவடி மணிகண்டன் சன்னிதிக்கு எவ்வழி - T.L மகாதேவன் ஐயப்பன் பஜனை பாடல் வரிகள். Kannimoola Ganapathy Saranam Un thiruvadi Manikanadan Sannathikku Evvali T.L Magadevan Ayyappan Songs Tamil Lyrics
கன்னிமூல கணபதி சரணம் உன் திருவடி மணிகண்டன் சன்னிதிக்கு எவ்வழி
தன்னந்தனி காட்டுவழி கண்ணிரண்டில் தூக்கமின்றி
உன்னிடத்தில் வேண்டி நின்றோம் நிம்மதி (கன்னிமூல கணபதி)
கணநாதா சிவபாலா துணை வா வா வா
கணநாதா சிவபாலா துணை வா வா வா (கன்னிமூல கணபதி)
லம்போதரனே கண நாதா மஹாசாஸ்த்ரே மணிகண்டா
மஹருத்ராய மணிகண்டா மகேஷ்வராய மணிகண்டா
விக்னராஜாய கண நாதா மஹாவேதினே மணிகண்டா
மஹாரூபாயா மணிகண்டா மஹாவேதினே மணிகண்டா
பாரதம் எழுதி சாதனை கண்ட யானை முகத்தவனே
குறமகள் வள்ளி முருகனைச் சேர உறுதுணை நின்றவனே
கைலை மலையை அவ்வை காண கருணை புரிந்தவனே
காந்தமலையை நாங்களும் காண அருள்வாய் கணபதியே
ஐயா மலையோ தூரம் ஏற்பாய் இருமுடி பாரம்
நோகுது நோகுது பாதம் மனதுக்கும் பெருகுது தாகம்.
கணநாதா சிவபாலா துணை வா வா வா
கணநாதா சிவபாலா துணை வா வா வா
கன்னிமூல கணபதி சரணம் உன் திருவடி மணிகண்டன் சன்னிதிக்கு எவ்வழி
தன்னந்தனி காட்டுவழி கண்ணிரண்டில் தூக்கமின்றி
உன்னிடத்தில் வேண்டி நின்றோம் நிம்மதி (கன்னிமூல கணபதி)
கணநாதா சிவபாலா துணை வா வா வா
கணநாதா சிவபாலா துணை வா வா வா (கன்னிமூல கணபதி)
லம்போதரனே கண நாதா மஹாசாஸ்த்ரே மணிகண்டா
மஹருத்ராய மணிகண்டா மகேஷ்வராய மணிகண்டா
விக்னராஜாய கண நாதா மஹாவேதினே மணிகண்டா
ஹேரம்பாய கண நாதா மஹாவேதினே மணிகண்டா
சைவம் வைணவ சங்கமம் தானே ஹரிஹர சுதனாகும்
ஐயன் திருவடி எங்களைச் சேர்த்தால் வாழ்வே பொன்னாகும்
தரிசாய் கிடக்கும் எங்களின் வாசல் கரிசல் நிலமாகும்
விரிசல் விழுந்த வாழ்க்கை பரிசல் விரைந்தே கரை சேரும்
ஐயா விழியில் ஈரம் துடைத்திட தும்பிக்கை தாரும்
நெய்யாய் உருகுது நெஞ்சம் அது உன் தம்பிக்கு மஞ்சம்
கணநாதா சிவபாலா துணை வா வா வா
கணநாதா சிவபாலா துணை வா வா வா
கன்னிமூல கணபதி சரணம் உன் திருவடி மணிகண்டன் சன்னிதிக்கு எவ்வழி
தன்னந்தனி காட்டுவழி கண்ணிரண்டில் தூக்கமின்றி
உன்னிடத்தில் வேண்டி நின்றோம் நிம்மதி (கன்னிமூல கணபதி)
கணநாதா சிவபாலா துணை வா வா வா
கணநாதா சிவபாலா துணை வா வா வா (கன்னிமூல கணபதி)
லம்போதரனே கண நாதா மஹாசாஸ்த்ரே மணிகண்டா
மஹருத்ராய மணிகண்டா மகேஷ்வராய மணிகண்டா
ஹேரம்பாய கண நாதா மஹாரூபாய மணிகண்டா
மஹாரூபாய கண நாதா மஹாவேதினே மணிகண்டா ....
உங்கள் கருத்து : comment