ஆதியும் நீயே அந்தமும் நீயே அரிஹர சுதனே ஐயப்பாஐயப்பன் பாடல் வரிகள். Athiyum Neeye Anthamum Neeye Harihara Suthane Ayyappa - K. Veeramani Ayyappa song Tamil Lyrics
ஆதியும் நீயே அந்தமும் நீயே
அரிஹர சுதனே ஐயப்பா
மாதவ மணியே மாணிக்க ஒளியே
மணிகண்ட சாமியே ஐயப்பா (ஆதியும் நீயே)
நீதியின் குரலே நித்திய அழகே
நெஞ்சத்தின் நினைவே ஐயப்பா
நாதத்தின் உயிரே நம்பிக்கை வடிவே
நானிலம் போற்றிடும் ஐயப்பா (ஆதியும் நீயே)
காலையில் கதிரே மாலையில் மதியே
கற்பூர ஜோதியே ஐயப்பா
ஆலய அரசே அன்பின் பரிசே
அபிஷேகப் ப்ரியனே ஐயப்பா (ஆதியும் நீயே)
குழைந்தையும் நீயே தெய்வமும் நீயே
கருணாகரனே ஐயப்பா
மழலையின் மொழியே மயக்கிடும் எழிலே
மரகத மூர்த்தியே ஐயப்பா (ஆதியும் நீயே)
உங்கள் கருத்து : comment