வெளியிட்ட தேதி : 24.02.2021
jaguar land rover
Automobiles

All JLR cars to be fully electric by 2030; Jaguar all electric by 2025

2025-ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து ஜாகுவார் கார்களும் (Jaguar Land Rover's car range) எலக்ட்ரிக் கார்களாக இருக்கும் என ஜாகுவார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜாகுவார் மற்றும் லேன்ட் ரோவர் பிராண்டுகளில் பல எலக்ட்ரிக் கார் மாடல்கள் 2030-ஆம் ஆண்டுக்குள் வரிசையாக அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜாகுவார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நவம்பரில், ஜெர்மனியின் வோக்ஸ்வாகனுக்கு (Volkswagen) சொந்தமான சொகுசு கார் பிராண்ட் பென்ட்லி மோட்டார்ஸ் (Bentley Motors), 2030 க்குள் அனைத்து மாடல்களும் முழுமின்சார கார் மாடல்களாக‌ இருக்கும் என்று கூறியது.

கடந்த மாதம், ஜெனரல் மோட்டார்ஸ் கோ (General Motors Co), 2035 க்குள் பூஜ்ஜிய-உமிழ்வு கார் வரிசையை அறிமுகப்படுத்துவது என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது..

லேண்ட் ரோவர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆறு மின்சார கார் மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது, முதல் மாடலானது 2024 இல் வெளிவரும் என்று ஜே.எல்.ஆர் கூறுகிறது.

ஜே.எல்.ஆர் (JLR) தனது எலெக்ட்ரிக் கார்களுக்கான புதிய தொழில்நுட்பத்திற்காக (electrification technologies) ஆண்டுக்கு சுமார் 2.5 பில்லியன் டாலர்கள் செலவிட திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தியரி பொல்லோரே கூறியுள்ளார். ஐரோப்ப, சீன நாடுகள் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்காக‌ எலக்ட்ரிக் கார்களுக்கு மாறிவருகின்றன. அதற்கான உற்பத்தியையும் தொடங்கியுள்ளன.

அதேபோல், நீண்ட காலமாக பிரித்தானிய அரசு 2030 முதல் அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் கார்களையும் விற்பனை செய்வதை சட்டவிரோதமாக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஜாகுவார் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஜே.எல்.ஆர் தனது மாடல் வரம்பை மின்மயமாக்குவதால், அதன் மூன்று பிரிட்டிஷ் ஆலைகளையும் துரித‌ நிலையில் வைத்திருக்கும் என்று தெரியப்படுகிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.