ஜகத் ஜனனி சுகபாணி பாடல் வரிகள்
Jagad Janani Sugabani Kalyani Tamil Lyrics | Janani Sugapaani Kalyani
ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி
சுகஸ்வரூபினி மதுரவாணி
சொக்கநாதர் மனம் மகிழும் மீனாட்சி
(ஜகத் ஜனனி)
பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ
சங்கரி பரமேஸ்வரி
வேண்டும் வரம் இன்னும் மனம் இல்லையோ
வேதவேதாந்த நாத ஸ்வரூபினி
(ஜகத் ஜனனி)
ஜகத் ஜனனி சுகபாணி பாடல் பொருள்
ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி
(உலக அன்னையே; கிளியை ஏந்தியவளே; மங்கலவடிவினளே)
சுகஸ்வரூபினி மதுரவாணி(கிளியைப் போன்று அழகானவளே; இனிய குரலை உடையவளே)
சொக்கநாதர் மனம் மகிழும் மீனாட்சி (ஜகத் ஜனனி)
பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ
சங்கரி (ரஞ்சனி) பரமேஸ்வரி(பாண்டிய இளவரசி; சிவனின் அரசியே; அம்மா; சிவன் மனத்தை மகிழ்விப்பவளே; பரமேஸ்வரனின் பாதியே)
வேண்டும் வரம் இன்னும் மனம் இல்லையோ
வேதவேதாந்த நாத ஸ்வரூபினி (ஜகத் ஜனனி)(வேத வேதாந்த இசை வடிவினளே)
இராகம்: ரதிபதிப்ரியா
தாளம்:ஆதி
இயற்றியவர்: கானம் கிருஷ்ண ஐயர்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், விசாலாக்ஷி நித்யானந்த்
இசைத்தவர்கள்: குன்னக்குடி வைத்தியநாதன், என்.ரமணி
உங்கள் கருத்து : comment