செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா : L.R. ஈஸ்வரி பாடிய அம்மன் பக்தி பாடல் வரிகள். Chellatha Chella Mariatha Enkal Sinthayil vanthu arai vinadi Nillatha- LR Iswari Amman Devotional songs Tamil Lyrics
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்லாத்தா)
தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா
நீ இளநீரை எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு
வளமான வாழ்வு கொடு மாரியாத்தா - நல்ல
வழி தன்னையே காட்டிவிடு மாரியாத்தா (செல்லாத்தா)
பசும்பாலைக் கறந்துகிட்டு கறந்தபால எடுத்துகிட்டு
புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி அதைப் பாங்காகக் குடித்துவிட்டு
தானாக ஆடிவா நீ மாரியாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்லாத்தா)
ஆதி சக்தி மாதா, கருமாரி மாதா - எங்கள்
ஆதி சக்தி மாதா, கருமாரி மாதா!
உங்கள் கருத்து : comment