அபிராமி அந்தாதி பாடல் 86-90அந்தாதிகள்

Abhirami Anthathi 86-90 Songs

 1. மால்அயன் தேட மறைதேட வானவர் தேடநின்ற
  காலையும் சூடகக் கையும் கொண்டு கதித்தகப்பு
  வேலைவெங் காலன்என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்
  பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.
  86
 2. :அச்சம் விலக….

 3. மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்றன்
  விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால்மதனை
  அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம்எல்லாம்
  பழிக்கும்படி ஒரு பாகம்கொண்டாளும் பராபரையே.
  87
 4. :செயற்கரிய செய்து புகழ்பெற…..

 5. பரம் என்றுனை அடைந்தேன்தமியேனும் உன் பத்தருக்குள்
  தரம்அன்றிவன்என்று தள்ளத் தகாது தரியலர்தம்
  புரம்அன்று எறியப் பொருப்புவில் வாங்கியபோதில்அயன்
  சிரம்ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே.
  88
 6. :அம்பிகையின் அருள் கிடைக்க….

 7. சிறக்கும் கமலத் திருவேநின் சேவடி சென்னிவைக்கத்
  துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
  உறக்கம் தரவந்து உடம்போடுயிர் உறவற்றரிவு
  மறக்கும் பொழுது என்முன்னேவரல் வேண்டும் வருந்தியுமே.
  89
 8. :யோகசித்தி பெற…

 9. வருந்தாவகை என் மனத்தாமரையினில் வந்துபுகுந்து
  இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
  பொருந்தா தொருபொருள் இல்லை விண்மேவும் புலவர்க்கு
  விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.
  90
 10. :தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்க…

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment