அபிராமி அந்தாதி பாடல் 71-75 அந்தாதிகள்

Abhirami Anthathi in Tamil

 1. அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
  பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள் பணி மாமதியின்
  குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொரும்பிருக்க
  இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என்குறையே.
  71
 2. :மனக்குறை நீங்க ……

 3. என்குறை தீர நின்றேத்துகின்றேன் இனி யான் பிரிக்கின்
  நின்குரையே அன்றி யார் குறை கான் இருநீள் விசும்பின்
  மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்
  தன்குறை தீர எங்கோன்சடைமேல் வைத்த தாமரையே.
  72
 4. :பிறவி பிணிதீர….

 5. தாமம் கடம்பு படைபஞ்ச பானம் தனுக்கரும்பு
  யாமம் வயிரவர் ஏத்தும் பொழுதேமகென்று வைத்த
  சேமம் திருவடி செங்கைகள் நான்கோளி செம்மை அம்மை
  நாமம் திரிபுரை ஒன்றோடிரண்டு நயனங்களே.
  73
 6. :கர்ப்பம் தரித்திட…..

 7. நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
  அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையைப்
  பயனென்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்பொன்
  சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.
  74
 8. :செய்தொழில் மேன்மை பெற…..

 9. தங்குவர் கற்பகத் தாருவின் நிழலில் தாயர்இன்றி
  மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்
  பொங்குவர் அழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
  கொங்கியவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.
  75
 10. :விதியை வெல்ல….

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment