வெளியிட்ட தேதி : 27.01.2013
ஆன்மீகம்

Abhirami Anthathi in Tamil

 1. சென்னியது உன் பொற்றிருவடித் தாமரை சிந்தையுள்ளே
  மன்னியதுன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
  முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே
  பன்னியதென்றும் உன்றன் பரமாகம பத்ததியே.
  06
 2. மந்திரசித்தி பெற்றிட….

 3. துதியுறும் மத்திற் சுழலும் என் ஆவி தளர்விலே தார்
  கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
  மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
  துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே.
  07
 4. துன்பம் நீங்கிட…

 5. சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரை எல்லாம்
  வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
  அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
  சுந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.
  08
 6. நல்லறம் சிறக்க…

 7. கருத்தன எந்தை தன் கண்ணன் வண்ணக் கனக வெற்பிற்
  பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
  திருத்தனபாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
  முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்தேன் முன்னிற்கவே.
  09
 8. இறையருள் பெற்றிட…

 9. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
  என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் எழுதாமாரையின்
  ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்
  தன்றும் பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே.
  10
 10. முக்திப்பேறு பெற்றிட….

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.