அபிராமி அந்தாதி பாடல் 41-45 அந்தாதிகள்
Abhirami Anthathi in Tamil
- புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி எங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.41 - இடங்கொண்டு விம்மி இணைகொண்டிறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலைகொண்டிறைவர் வலியநெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே.42 - பரிபுரச் சீறடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துரமேணியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.43 - தவளே இவள் எங்கள் சங்கரனார்மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே.44 - தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசடியேன்
கண்டுசெய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ
மீண்டு செய்தாலும் பொறுக்கைநன்றே பின் வெறுக்கை அன்றே.45
:இறை அடியார் நட்புகிட்ட….
:இவ்வுலகம் நமக்கு உதவிட….
:தீமையெல்லாம் நீங்க…
: மனநலம் சீராக…
:வீண் பழிகள் நீங்கிட…
இதுவும் உங்களுக்கு பிடிக்கும்
ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.
உங்கள் கருத்து : comment