வெளியிட்ட தேதி : 27.01.2013
ஆன்மீகம்

Abhirami Anthathi in Tamil

 1. ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
  வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
  தானந்தமான சரணார விந்தம் தவளநிறக்
  கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் மூடிக் கண்ணியதே.
  11
 2. இல்வாழ்கை இன்பம் நிலைத்திட…

 3. கண்ணியது உன்புகழ் கற்பதுன் நாமம் கசிந்துபத்தி
  பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில் பகல் இரவா
  நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
  புண்ணியம் ஏதுவன் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.
  12
 4. தியானத்தில் மனம் ஒருமைப்பட ...

 5. பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
  காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
  மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
  மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.
  13
 6. மனோதிடம் பெற்றிட…

 7. வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
  சிந்திப்பவர் நல்திசை முகர் நாரணர் சிந்தையுள்ளே
  பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
  சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே.
  14
 8. முதன்மை ஏதிலும் பெற…

 9. தண்ணளிக்கொன்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
  மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர்தம்
  விண்ணளிக்கும் செல்வமும் அழியாமுக்தி வீடுமன்றோ
  பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
  15
 10. அழியாசெல்வமும் பேரின்பமும் பெற….

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.