தமிழ்ப் பழமொழிகள் ‍'நா' வில் ஆரம்பிக்கும்

நா அசைய நாடு அசையும்.
நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.
நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமும் இல்லை.
நாய் விற்ற காசு குரைக்குமா?
நாய் வாலை நிமிர்த்த முடியாது.
நாலாறு கூடினால் பாலாறு.
நாள் செய்வது நல்லார் செய்யார்.
நாற்பது வயதுக்கு மேல் நாய்க் குணம்.
நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்.

உங்கள் கருத்து : comment