சபரிமலை தரிசன நேரம் நீட்டிப்பு : மகரவிளக்கு பூஜை ! குவியும் பக்தர்கள்

மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் சுவாமி தரிசனம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சனிக்கிழமை முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மண்டல, மகரவிளக்கு காலத்தை ஒட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் கடந்த 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜைக்கு பின் அன்றிரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. இதையடுத்து மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, ஐயப்பன் கோவில் நடை கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 60 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. புதுவருட பிறப்பையொட்டி நேற்று ஏராளமானபக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். புத்தாண்டு பிறந்துள்ளதால் இன்றும் வரும் நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும் என கருதப்படுகிறது.

இதனால், இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதியன்று நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கு பின்னர் வரும் ஜனவரி 19ம் தேதி நடை சாத்தப்படுகிறது. பக்தர்கள் தரிசனத்திற்கு வரும்போது, 2 டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வரவேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment