ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக சிறப்புற்றது

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா (20.12.2022) அன்று கோலாகமாக நடைபெற்றது. பூமியின் மையப்பகுதியென‌ கூறப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதம் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும்.

Arudra Darisanam : பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாக‌ விளங்கும் ஆகாய ஸ்தலமான‌ சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா (20.12.2022) அன்று கோலாகமாக நடைபெற்றது. பூமியின் மையப்பகுதியென‌ கூறப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதம் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆருத்ரா தரிசன நாளன்று சிதம்பரம் பகுதியில் உள்ள அனைவரது வீடுகளிலும் களியை செய்து சிவபெருமானுக்கு படைப்பது வழக்கம். ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மேலும் சிவபெருமான் சேந்தனார் வீட்டிற்கு களி உண்ண‌ சென்ற தினம் மார்கழி மாதம் ஆகும். திருவாதிரை நட்சத்திரத்தன்று வரும் அந்த தினத்தையே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவ ஆச்சாரியார் சக்கரவர்த்தி தீட்சிதர் கொடியேற்றி வைத்து, திருவிழா நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.

பஞ்சமூர்த்திகள் வீதியுலா, தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட 5 சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி நான்கு வீதிகளை வலம் வந்தனர். (21.12) அதிகாலை நடராஜர், சிவகாமசுந்தரிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த காட்சியை பார்த்த பக்தர்கள் நடராஜரை மனமுருகி வேண்டி, நமச்சிவாய நமசிவாய என கோஷமிட்டு வழிபட்டு வருகின்றனர். தொடர்ந்து நடராஜர் சிவகாம சுந்தரி சுவாமிகளை தீட்சிதர்கள் கோவில் கருவரை கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கு வைத்து பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக‌ முடிவடைந்தது.

சிதம்பரம் நடராஜர் கோவில்

ஆகாயம் தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டிடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகர் சிதம்பரம். பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாச வடிவில், சிவன் இருக்கிறார் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. திருசிற்றம்பலம், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது. சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழமையானது, பெருமை வாய்ந்தது. சிவபெருமான், நடராசராக, சிவகாமியம்மையுடன் வீற்றிருக்கும் ஆலயம். ஏனைய ஆலயங்களில் லிங்க வடிவமாக இருக்கும் சிவபெருமான், இங்கு நடனமாடும் நிலையில் காட்சியளிக்கிறார். மூலவர் இருக்கும் இடம் கனக சபை என்று அழைக்கப்படுகிறது.

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment